U19 Womens T20 WC Final Live: இங்கிலாந்துக்கு எதிரான யு 19 மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி சாம்பியன்..!
U19 Women's T20 World Cup Final live Updates: 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.
LIVE
Background
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.
தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் உள்ள மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.
முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 உலகக்கோப்பை தொடரில், 16 அணிகள் பங்கேற்றன. தென்னாப்ரிக்காவில் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வென்று இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய அணி நிலவரம்:
இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். பர்ஷவி சோப்ரா அரையிறுதியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், கேப்டன் ஷஃபாலி வர்மா எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். தொடக்க வீராங்கனையான ஸ்வேதா செஹ்ராவத்தின் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளா. அநாவசிய தவறுகள் எதையும் செய்யாமால், இந்திய அணி தனது திறமைகளை வெளிப்படுத்தினால், 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் டி-20 உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
நியூசிலாந்து அணி நிலவரம்:
அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை வெறும் 96 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருட்டியது. ஹன்னா பேக்கர் நான்கு ஓவர்களில் 3/10 என்ற அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதே நேரத்தில் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் 3.4 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், சௌமியா திவாரி, கோங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (வி.கீப்பர்), ஹ்ரிஷிதா பாசு, டைட்டாஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்
உத்தேச இங்கிலாந்து அணி:
கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (கேப்டன்), லிபர்ட்டி ஹீப், நியாம் பியோனா ஹாலண்ட், செரன் ஸ்மேல், டேவினா சாரா டி பெர்ரின்/ரியானா மெக்டொனால்ட் கே, சாரிஸ் பாவேலி, அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ், மேடி கிரேஸ் வார்டு (வி.கீப்பர்), சோபியா ஸ்மால், எல்லி ஆண்டர்சன், ஹன்னா பேக்கர்
இந்த கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால் டி20 மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய பெருமை இந்தியாவிற்கு சேரும்.
உலககோப்பையை கைப்பற்றிய இந்தியா...மகளிர் அணி சாதனை
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
இறுதிபோட்டியில், 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்களை எடுத்து இந்தியா ஆடி வருகிறது.
இங்கிலாந்து ஆல் அவுட்..!
இந்தியாவுக்கு எதிரான இறுதிபோட்டியில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நிலைகுலைந்த இங்கிலாந்து: 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் 63 ரன்களை எடுத்துள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்
4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறி வருகிறது. 7 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டு இழப்புக்கு 23 ரன்களை எடுத்துள்ளது.