Australian Open 2023: ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தியது.
In a fitting farewell, @MirzaSania's last dance will take place on the grandest stage!
She and @rohanbopanna 🇮🇳 have qualified for the Mixed Doubles Final!@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/qHGNOvWMoC— #AusOpen (@AustralianOpen) January 25, 2023
இதற்கு முன்னதாக, லாட்வியன் மற்றும் ஸ்பெயின் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஆகியோருக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி வாக் ஓவர் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சானியா ஏற்கனவே இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சிறப்பாக விளையாடி தனது பெயரில் மற்றொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்று பலரும் கனவுடன் உள்ளனர்.

