Australian Open Badminton Final: ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடர்.. இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன்
ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடரில் இந்திய வீரர், பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடரில் இந்திய வீரர், பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்றார். 9-21, 23-21, 20-22 என்ற செட் கணக்கில் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்ற்றார்.
கம்பேக்கில் அசத்திய வெங் ஹாங் யாங்:
சிட்னியில் நடைபெற்ற போட்டியின் முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பிரனாய், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையாக போராடி 23-21 என்ற கணக்கில், இரண்டாவது செட்டை தனதாக்கினார். இதனால் போட்டியின் மூன்றாவது செட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு சமயத்தில் 71 ஷாட்களை இரண்டு வீரர்களும் சேர்ந்து இடைவிடமால் அடித்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றி, பிரனாயை வீழ்த்தி வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
Men's Singles - #AustralianOpen2023
— Badminton Talk (@BadmintonTalk) August 6, 2023
🥇Weng Hongyang (CHN)
🥈H.S. Prannoy (IND)
Congratulations to both players! pic.twitter.com/MWVSgPFfi5
பழிக்குப் பழி:
உலக தரவரிசைப் பட்டியலில் 24ம் இடத்தில் உள்ள வெங் ஹாங் யாங், கடந்தாண்டு நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பிரனாய் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 6 ஆண்டுகளில் அவர் வெற்றி பெற்ற முதல் ஒற்றையர் சாம்பியன் பட்டம் இது தான். இந்நிலையில் தான் அந்த தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிரனாயை வீழ்த்தி வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அரையிறுதியில் பிரனாய்:
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.