மேலும் அறிய

Asian Games 2023: 'திருநங்கையிடம் பதக்கத்தை இழந்து விட்டேன்..' சக இந்திய வீராங்கனையை அவமதித்த ஸ்வப்னா பர்மன்!

தனக்கு எதிராக போட்டியிட்டு வென்ற சக இந்திய வீராங்கனையான நந்தினியை ‘திருநங்கை’ என தாக்கி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் சாம்பியனான ஸ்வப்னா பர்மன்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிகள்:

இதில், துப்பாக்கி சூடுதல், குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த போட்டிகளில் இந்திய அணி இதுவரை 13 தங்கப்பதக்கங்களையும், 21 வெள்ளி மற்றும் 21 வெண்கலப்பதக்கங்கள் என்று மொத்தம் 55 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஹெப்டத்லான்(heptathlon) தடகள வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், தனக்கு எதிராக போட்டியிட்டு வெண்கலப்பதக்கம் வென்ற சக இந்திய வீராங்கனையான நந்தினியை ‘திருநங்கை’ என தாக்கி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனக்கு உதவுங்கள்:

அந்த பதிவில், “சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ’திருநங்கை’ ஒருவரிடம் நான் எனது ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கத்தை இழந்துள்ளேன். இது  தடகள விதிகளுக்கு எதிரானது என்பதால் எனது பதக்கம் திரும்பப் பெற வேண்டும். எனக்கு உதவுங்கள், தயவுசெய்து எனக்கு ஆதரவளிக்கவும்” என்று கூறியுள்ளார்.  இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அந்த பதிவை ஸ்வப்னா தற்போது நீக்கியுள்ளார்.

ரசிகர்கள் கண்டனம்:

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் இந்த முறை தோல்வியுற்றதால் விரக்தியில் இவ்வாறு பேசுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நந்தினி, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதக்கம் வென்ற பிறகு பேசிய அவர், “ இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய அரசு எனக்கு அளித்த ஆதரவால்தான் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தது. இந்த பதக்கத்திற்காக எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக இந்திய அரசுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Asian Games 2023: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயம்.. வெண்கல பதக்கத்தை கையில் ஏந்திய இந்திய அணி!
 
மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: உலகக் கோப்பையில் இருக்கும் பல சம்பவம்.. ரோஹித் சர்மா உடைக்க காத்திருக்கும் பல்வேறு சாதனைகள்.. முழு லிஸ்ட் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
Embed widget