Asian Games 2023 Badminton: வரலாற்றிலே முதன்முறை! ஆசிய விளையாட்டுப் போட்டி பாட்மிண்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் அசத்தலாக ஆடி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலே பாட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பைனலுக்கு சென்ற இந்தியா:
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா – கொரியா அணி மோதின. இதில் இந்திய அணி சார்பில் எஸ்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் களமிறங்கினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி வந்தனர். போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர்களின் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Never a dull moment with Sat-Chi 🥳
— SAI Media (@Media_SAI) October 6, 2023
Our favorite badminton 🏸 doubles duo is in the finals after defeating 🇲🇾's Chia/Liu 21-17, 21-12 and we couldn't be more thrilled!
Many congratulations to @satwiksairaj & @Shettychirag04 🥳
Go, rock the finals and bring home the historic… pic.twitter.com/bEzyYRI5FI
இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவுடன் மோத உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலே இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
அதேபோல இந்தியாவின் சிராஜ் ஷெட்டி – சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி உலகின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தலைசிறந்த ஜோடியான 3ம் நிலை வீரர்களான மலேசியாவின் காங்மிங்ஹியூக் – சியோ சியூங் ஜா ஜோடியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் அவர்களை வீழ்த்திய இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய பாட்மிண்டன் ஜோடி சிறப்பாக ஆடி பதக்கத்தை கைப்பற்றுவது உறுதியாகி இருப்பதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை நிச்சயம் 100-ஐ கடக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.
37 ஆண்டுகளுக்கு பிறகு:
பிரணாயி கொரியாவின் ஹையோகிஜின் ஜியோனுக்கு எதிராக 18-21, 21- -16. 21-19 ஆகிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரணாயி உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர்களில் ஒருவர் ஆவார். சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பேட்மிண்டன் படை பதக்கம் வெல்ல உள்ளது. கடைசியாக 1986ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் போட்டியை நடத்த சீனா 187 தங்கம், 104 வெள்ளி, 62 வெண்கலம் 353 பதக்கங்களை குவித்துள்ளது. ஜப்பான் 46 தங்கம், 57 வெள்ளி, 62 வெண்கலம் என 165 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரியா 36 தங்கம், 49 வெள்ளி, 84 வெண்கலம் என மொத்தம் 169 பதக்கங்களை குவித்துள்ளது. இந்தியா இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 95 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் உஸ்பெகிஸ்தான், சீன தைபே, கொரியா, தாய்லாந்து, பஹ்ரைன், கஜகஸ்தான் ஆகிய அணிகள் முறையே வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Asian Games 2023: தென் கொரியா பேரழகி! கபடி வீராங்கனை! ராணுவத்திலும் சர்வீஸ்! யார் இந்த வூ ஹீ - ஜுன்?
மேலும் படிக்க: Asian Games: ஆசிய விளையாட்டு - அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி ஃபைனலுக்கு முன்னேற்றம்