Asian Games 2023: தென் கொரியா பேரழகி! கபடி வீராங்கனை! ராணுவத்திலும் சர்வீஸ்! யார் இந்த வூ ஹீ - ஜுன்?
தென்கொரியாவில் கபடி விளையாட்டை பிரபலபடுத்தி வரும் அழகி மற்றும் கபடி வீராங்கனை வூ ஹீ- ஜுன்.
தென் கொரியா நாட்டில் ’கபடி’ விளையாட்டு ஒருவரால் பிரபலமடைந்து வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
ஆம், தென் கொரியா முழுவதும் தற்போது கபடி விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் தென் கொரிய கபடி வீராங்கனை வூ ஹீ-ஜுன் தான். அவருக்கு கபடி மீது காதல் எப்படி வந்தது என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்:
கபடி:
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளான ஆயர்களால் பல காலமாக, விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. அதாவது கை+பிடி = கபடி.
விளையாடுபவர்களின் எண்ணிக்கை : இரு அணிகள்(ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர்).
ஆட்ட நேரம்: 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார்.
ஆடுகளம்: மேடு பள்ளம் இல்லாத ஒரு நீள்சதுரமான சமதள இடம்.
வூ ஹீ-ஜுன்-ன் இந்திய பயணம்:
ஒரு முறை வூ ஹீ-ஜுன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது இந்தியத் தெருக்களில் சிறுவர்கள், “கபடி கபடி” என்று பாடிக்கொண்டு விளையாடுவதை பார்த்த வூ ஹீ- ஜுனுக்கு அந்த விளையாட்டைப் பிடித்து விட்டது.
பின்னர், அந்த விளையாட்டைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட அவர், தங்களுடைய நாட்டிலும் கபடி விளையாட்டை விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டார்.
பின்னர், அங்கு சென்ற அவர் கபடியை விளையாட தொடங்கி உள்ளார்.
View this post on Instagram
ஆசிய விளையாட்டு போட்டி:
வூ ஹீ-ஜுன் தற்போது சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் கொரியாவின் பெண்கள் கபடி அணியில் விளையாடி வருகிறார்.
தற்போதைய சூழலில் தென்கொரிய பெண்கள் கபடி அணி இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறிவிட்டது என்றாலும், வூ ஹீ- ஜுன் அவர் நாட்டில் கபடியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்பப்படுகிறது.
View this post on Instagram
தென்கொரிய அழகி:
கபடி வீராங்கனை மட்டுமின்றி இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். அத்துடன், அங்கு உள்ள இராணுவத்திலும் பணியாற்றி இருக்கிறார் வூ ஹீ-ஜுன்.
கபடியை பிரபலபடுத்தும் வூ ஹீ-ஜூன்:
தென்கொரியா முழுவதும் கபடியை பிரபலபடுத்துவதை ஒரு பணியாகவே செய்து வருகிறார். இதனிடையை இது தொடர்பாக பேசி உள்ள அவர், “ இது கால்பந்து போல் மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கபடி பிரபலமாகி வருகிறது.” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
உருவாகும் புதிய வீரர்கள்:
”பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கபடி வீரர்கள் பலர் நல்ல திறமையான வீரர்களாக உருவாகி வருகின்றனர். இது மேலும் வளரும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Shubman Gill : கடைசி நேரத்தில் சுப்மன் கில்லுக்கு நடந்த சோகம்.. அவருக்கு பதில் களத்தில் இறங்கப்போவது யார்?
மேலும் படிக்க: PAK vs NED World Cup 2023: உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா பாகிஸ்தான்? டாஸ் வென்ற நெதர்லாந்து பீல்டிங் தேர்வு