மேலும் அறிய

Asian Games 2023: 29 ஆண்டுகளுக்குப் பின் படகோட்டுதல் போட்டியில் பதக்கம்.. சாதனையை செதுக்கிய அர்ஜுன் - சுனில் ஜோடி!

இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

இன்று 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10வது நாளாகும். இதுவரை நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 61 பதக்கங்களை வென்றுள்ளது. இன்றைய 10வது நாளின் முதல் பதக்கம் படகோட்டுதல் போட்டியில் இருந்து வந்தது. படகோட்டுதல் போட்டியில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஜோடி நாட்டிற்கு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஷோக்முரோட் கோல்முராடோவ் மற்றும் நூரிஸ்லோம் துக்தாசின் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் டிமோஃபி யெமிலியானோவ் மற்றும் செர்ஜி யெமெலியானோவ் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 

இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஜோடி 329 வினாடிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், 3:53 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  ஆசிய விளையாட்டு வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு படகோட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

ஆசிய விளையாட்டு வரலாற்றில் கேனோவில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு ஹிரோஷிமா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிஜி சதானந்தன் மற்றும் ஜானி ரோம்மல் ஆகியோர் இதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். 

இந்தியா - இதுவரை 61 பதக்கங்கள்: 

இதுவரை, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம் தவிர, 24 வெள்ளிப் பதக்கங்களும், 24 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். புள்ளிப்பட்டியலில் இந்தியா தற்போது 61 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் சீனா 273 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

இன்றைய நாளில் சிறந்த தருணம்

இந்திய கபடி அணி இன்று (அக்டோபர் 3) முதல் ஆசிய விளையாட்டு 2023 இல் தனது முதல் போட்டியில் விளையாடியது. தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இந்தியா 55-18 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணி:

பவன் செஹ்ராவத் (கேப்டன்), சுர்ஜித் சிங், அஸ்லாம் இனாம்தார், நவீன் குமார், பர்வேஷ் பைஸ்வால், விஷால் பரத்வாஜ், நிதிஷ் குமார், அர்ஜுன் தேஸ்வால், சுனில் குமார், நிதின் ராவல், சச்சின் தன்வார், ஆகாஷ் ஷிண்டே.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget