Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
-
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த கோடை மழையானது ஆறுதல் அளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்குமாறு 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பியுள்ளது. மே 18 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பஞ்சாப் அணி சாம் கரன் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத், ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.
- மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.நேற்று அதிகாலை அதேபகுதியில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் பலியான நிலையில் மீண்டும் விபத்தில் 4 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
ஆந்திரா வன்முறை - மேலும் இரண்டு எஸ்.பி-க்கள் சஸ்பண்ட்!
ஆந்திராவில் 13ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலால் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி, சந்திரகிரி, தாடிபத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு எஸ்.பிக்களை சஸ்பண்ட் செய்துள்ளது.
ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
தேனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!
ஒரு மனிதன் சகமனிதனிடம் தீண்டாமையை கடைபிடிப்பதை நீதிமன்றம் எப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. இது ஏற்புடையது அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம் - பிரச்சாரத்தில் அமித் ஷா சர்ச்சை பேச்சு!
பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தில் பேசியபோது, சீதா பிறந்த பூமியான பீகாரில் பசுவதை செய்தால் அவர்களை தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள, காவல்துறைக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.