India vs China Hockey LIVE: பொழிந்த கோல் மழை.. 7 - 2 என்ற கணக்கில் வென்ற இந்திய ஹாக்கி அணி..!
Malaysia vs Pakistan Hockey LIVE Score Updates: ஹாக்கி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
LIVE
Background
India vs China Hockey LIVE Score Updates: ஹாக்கி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்
ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இந்த 7வது சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடரை நடத்துகிறது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முன்னதாகவே இந்த தொடருக்காக சென்னைக்கு வந்த அணிகள், தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டிகள்
இப்படியான நிலையில் தொடக்க நாளான இன்று நடப்பு சாம்பியன் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதுகிறது. மாலை 4 மணிக்கு இந்த ஆட்டமானது நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு நடக்கும் 2வது ஆட்டத்தில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
கெத்து காட்ட தயாராகும் இந்தியா
சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி திருவிழா நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த போட்டிக்காக ஹாக்கி மைதானம் ரூ.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதேசமயம் புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் நவீன வசதிகள் என மைதானம் சூப்பராக காட்சியளிக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளில் நடைபெறும் ஆட்டங்கள் அனைத்தையும் பார்க்க ரூ.300, ரூ.400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தரவரிசையில் 'நம்பர் ஒன்' அணியான நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. அதே உற்சாகத்திடன் களம் காண்பதால் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்கள் கெத்தை காட்டுவார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டு தொடரில் 3வது இடத்தை பெற்ற இந்திய அணி இம்முறை சொந்த மண்ணில் களமிறங்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், பேன் கோடு (Fancode) செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்கிடையில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக கொண்டு வரப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம், தமிழ்நாடு முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலினிடம் நேற்று ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
India vs China Hockey LIVE: பொழிந்த கோல் மழை.. 7 - 2 என்ற கணக்கில் வென்ற இந்திய ஹாக்கி அணி..!
ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் 3வது போட்டியில் இந்திய அணி சீனா அணியை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
India vs China Hockey LIVE: 7வது கோலை தெறிக்கவிட்ட இந்தியா.. திணறும் சீனா..!
2வது பாதி தொடக்கத்தில் மந்தீப் சிங் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற, இந்திய அணி 7வது கோலுடன் ஆதிக்கம் செலுத்தியது.
India vs China Hockey LIVE: முதல் பாதி முடிவு: 6 கோல்களுடன் இந்திய அணி முன்னிலை..!
முதல் பாதி முடிவில் இந்திய அணி 6 கோல்களும், சீன அணி 2 கோல்களும் அடித்துள்ளது. இந்தியா சார்பில் வருண் குமார் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களையும், ஆகாஷ்தீப் மற்றும் சுக்ஜீத் ஒரு கோல் அடித்தனர்.
India vs China Hockey LIVE: அட்டகாசமான 5வது கோல்.. சீனாவுக்கு எதிராக வருண் குமார் செய்த சம்பவம்..!
சீனாவுக்கு எதிரான ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் வருண்குமார் கோலை பதிவு செய்து, இந்திய அணியை 5 கோலுடன் முன்னேற்றினார்.
India vs China Hockey LIVE: நச்சுன்னு நாலு கோல்.. சீனாவை ஹாக்கியில் கதறவிடும் இந்திய அணி..!
2வது காலிறுதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி சீனாவுக்கு எதிராக 4 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளது. சீனாவும் தனது பங்கிற்கு 1 கோலை பதிவு செய்துள்ளது.