மேலும் அறிய

Asian Champions Trophy 2023: மூன்று முறை டைட்டில்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கம்..!

Asian Champions Trophy 2023: மொத்தம் நடைபெற்றுள்ள 6 சீசன்களில் இந்திய அணி 2 முறை பாகிஸ்தான் அணியை வென்றும் ஒருமுறை பாகிஸ்தான் அணியுடன் சேர்த்தும் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி அதாவது நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது.  சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், முதல் மூன்று ஆண்டுகள் அதாவது 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகள் ஆசிய ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் நடத்தப்படுகிறது. 2016, 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது. 

மொத்தம் நடைபெற்றுள்ள 6 சீசன்களில் இந்திய அணி 2 முறை பாகிஸ்தான் அணியை வென்றும் ஒருமுறை பாகிஸ்தான் அணியுடன் சேர்த்தும் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. மூன்று முறை டைட்டிலை வென்ற இந்திய அணியின் பர்ஃபாமன்ஸ் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

இந்திய அணி இதுவரை நடைபெற்ற 6 சீசன்களிலும் மொத்தம் 37 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 24 போட்டிகளில் வென்றுள்ளது. 8 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி இதில் 147 கோல்கள் அடித்துள்ளது. இன்னும் மூன்று கோல்கள் அடித்தால் இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் 150 கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெறும். 

இதுவரை இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இம்முறை தனது சொந்த மண்ணில் இந்திய அணி களமிறங்குவது இந்திய அணிக்கு 4வது டைட்டிலை வெல்ல உத்வேகத்தை அளிக்கும் என ஹாக்கி வட்டாரங்கள் நம்பிக்கையாக உள்ளன. மேலும், இந்திய அணிக்கு சரிநிகர் பலமாக உள்ள அணி என்றால் அது பாகிஸ்தான் தான் , அந்த அணியிம் மூன்று முறை டைட்டில், 5 முறை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற அனுபவத்துடன் உள்ளது. அதேபோல், நடப்புச் சாம்பியனான சௌத் கொரியா மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என்பதால் இம்முறை போட்டியில் அனல் பறக்கும் எனலாம். நாளை தொடங்கவுள்ள இந்த தொடருக்காக இந்தியா மற்றும் மற்ற 5 நாடுகளின் அணிகள் சென்னையில்  முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுவருகின்றன. 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget