Asia Games 2023: ஆசிய விளையாட்டில் தங்கம் எங்களது அங்கம்.. 38 போட்டிகளுக்காக 634 வீரர்களை களமிறங்கிய இந்தியா..!
கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 572 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று அசத்தியது.
செப்டம்பர் 23ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியை விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் 634 வீரர்களுக்கு இடம் பெற்றுள்ளனர்.
இந்த 634 விளையாட்டு வீரர்களும் 38 பிரிவுகளின் கீழ் உள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 572 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று அசத்தியது.
எந்தெந்த பிரிவுகளில் வீரர்களின் எண்ணிக்கை அதிகம்..?
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த சுமார் 65 வீரர்கள் தடம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்கின்றன. அதன்படி, 34 ஆண்கள் தடகள வீரர்களும், 31 பெண்கள் தடகள வீராங்கனைகளும் களத்தில் இருப்பார்கள். தொடர்ந்து, கால்பந்து அணியை பொறுத்தவரை தலா 22 என்ற எண்ணிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் 44 பேர் பங்கேற்கின்றனர்.
அடுத்ததாக, இந்திய ஹாக்கி அணியில் 36 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் தலா 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ஆண்கள் மற்றும் கிரிக்கெட் அணியில் தலா 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வகையில் கிரிக்கெட்டில் மொத்தம் 30 இந்திய வீரர்கள் களம் காண்கின்றனர். இது தவிர, துப்பாக்கி சுடுதலில் 30 பேரும், படகு ஓட்டுதல் போட்டியில் 33 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மீது அதிக நம்பிக்கை:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேலே குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளைத் தவிர, நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா நிச்சயம் தங்கப்பதக்கங்களை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய வீரர்கள் பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால் மற்றும் ரக்பி ஆகியவற்றில் தங்கத்தை தட்டி தூக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
கவனம் ஈர்க்கும் கபடி:
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தலா 12 பேர் கொண்ட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டது. 2018 ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் மகளிர் அணி வெள்ளியும், ஆண்கள் அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை எட்டு தங்கப் பதக்கங்களில் ஏழில் இந்திய ஆண்கள் வென்றுள்ளனர். கடந்த முறை ஜகார்த்தா 2018 இல் நடந்த அரையிறுதியில் ஈரானிடம் தோற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.இதுவரை நடந்த எட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் கபடி அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஜகார்த்தாவில் நி கழ்ந்தவையாகும்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய விளையாட்டு 2023 கபடி: இந்திய அணி
இந்திய ஆண்கள் கபடி அணி : நிதேஷ் குமார், பர்வேஷ் பைன்ஸ்வால், சச்சின், சுர்ஜித் சிங், விஷால் பரத்வாஜ், அர்ஜுன் தேஷ்வால், அஸ்லாம் இனாம்தார், நவீன் குமார், பவன் செராவத், சுனில் குமார், நிதின் ராவல், ஆகாஷ் ஷிண்டே.
இந்திய பெண்கள் கபடி அணி : அக்ஷிமா, ஜோதி, பூஜா, பூஜா, பிரியங்கா, புஷ்பா, சாக்ஷி குமாரி, ரிது நேகி, நிதி ஷர்மா, சுஷ்மா சர்மா, சினேகல் பிரதீப் ஷிண்டே, சோனாலி விஷ்ணு ஷிங்கட்.