Asia Cup Hockey 2022: ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கலம்
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.
Indian men's hockey team claims bronze medal in Asia Cup at Jakarta, Indonesia
— Press Trust of India (@PTI_News) June 1, 2022
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் சூப்பர் 4 சுற்றில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மலேசியா தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
View this post on Instagram
முன்னதாக, மலேசியாவும், தென்கொரியாவும் கோல் வித்தியாசத்தில் அட்டவணையில் முன்னணியில் இருந்ததால் தென்கொரியாவுடனான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா தென்கொரியாவிற்கு கடுமையான நெருக்கடியை கொடுத்த போதினும் ஆட்டம் 4-4 என்ற கணக்கில் ட்ராவில் முடிந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் இந்தியா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தபோட்டியில் 1- 0 என்ற கோல் கணக்கில் இந்தியா ஜப்பானை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது.