‛லவ்’ பண்ண இடமே இல்லையா... மைதானத்தில் ப்ரொபோசல்... ‘ஓகே’ சொன்ன காதலி!
போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த 24 அணிகள் மற்றும் கனாடாவைச் சேர்ந்த 3 அணிகள் என மொத்தம் 27 அணிகள் பங்கேற்று விளையாடும் மேஜர் லீக் சாக்கர் கால்பந்து ஆட்டத்தின்போது ஹஸ்ஸனி என்ற காலந்து வீரர் அவரது காதலியிடம் ‘ப்ரொபோஸ்’ செய்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேஜர் லீம் சாக்கர் தொடரின் ஒரு போட்டியில், மின்னிசோட்டா எஃப்.சி மற்றும் சான் ஜோஸ் எர்த்குவேக் ஆகிய அணிகள் நேற்று மோதின. போட்டியின் முடிவில் 2-2 என இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்ததால் போட்டி டிரா ஆனது.
இந்நிலையில், போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
தன் காதலியின் முன்பு மைதானத்திலேயே மண்டியிட்ட ஹஸ்ஸானி, மோதிரத்தை பரிசளித்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்தார். அவர் காதலைச் சொன்னவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்தி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ப்ரொபோஸ் செய்தவுடன் ஆச்சர்யமடைந்த காதலி, வெட்கத்தில் ஹஸ்ஸானியை கட்டித்தழுவி காதலை ஏற்றுக்கொண்டார். இந்த க்யூட் சம்பவத்தை ஹஸ்ஸானியும், அவரது காதலி பெட்ராவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். லைக்ஸ்களை அள்ளிய இந்த பதிவில், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
View this post on Instagram
”நான் எந்தளவு மகிழ்ச்சியாய் உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாழ்நாளில் மறக்க முடியாத இந்த சம்பத்திற்கு ஆதரவு தந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
FT: An energetic back-and-forth battle sees @MNUFC & @SJEarthquakes split the points. #MINvSJ pic.twitter.com/RkMpepeZ8t
— Major League Soccer (@MLS) July 4, 2021
ஹஸ்ஸானி விளையாடி அந்த போட்டியில் என்னமோ அவர அணி வெற்றி பெறவில்லை, போட்டி டிரா ஆனது. ஆனால் ஹஸ்ஸானி தன் லவ் வாழ்க்கையில் கோல் அடித்து வெற்றியை பதிவுள்ளார். வாழ்த்துகள் வீரரே!