4-வது ஐ பி எல்: 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி நேற்று ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 91 ரன் குவித்தார். தீபக் ஹூடா வெறும் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 64 ரன் குவித்து கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன் அடித்தார். இதில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களும் அடங்கும். ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சிவம் துபே முறையே 0, 25, 23 ரன் அடித்தனர்.
இரு அணிகள் இதுவரை 22 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் 12இல், பஞ்சாப் 10இல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.