Covid Positive in IPL Team : முதலில் கொரோனா பாசிட்டிவ்.. பின்பு நெகட்டிவ் - குழப்பத்தில் ஐபிஎல் அணிகள்..
கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களூரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை அணியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை அணியில் சிஇஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அணியின் பேருந்து ஓட்டுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
UPDATE: IPL reschedules today's #KKRvRCB match after two KKR players test positive. #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) May 3, 2021
Details - https://t.co/vwTHC8DkS7 pic.twitter.com/xzcD8aijQ0
மேலும் இன்று காலை மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். இந்த பரிசோதனையில் இவர்கள் மூவருக்கும் நெகட்டிவ் என்ற முடிவு வந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட முடிவுகளால் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இனிமேல் வீரர்களுக்கு பல முறை கொரோனா பரிசோதனை செய்து 2 முறைக்கு மேல் பாசிட்டிவ் வந்தால் தொற்று என்று கூறுவதா என்பது தெரியாமல் உள்ளனர். கொரோனா பரிசோதனை ஃபால்ஸ் பாசிட்டிவ் என்பது நடப்பது வழக்கம். இதனை மற்றொரு முறை பரிசோதனை செய்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே கொல்கத்தா அணியில் இரு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயோ பபுள் முறையில் இருந்த வீரர்களுக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மற்ற வீரர்களுக்கும் தினமும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கொல்கத்தா அணியின் வீரர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வேறு ஒரு பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயோ பபுள் நடைமுறையிலும் எப்படி இது நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் டெல்லி கோட்லா மைதானத்தின் ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது ஐபிஎல் போட்டிகள் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தப் போட்டிகள் திட்டமிட்டபடி நடப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐபிஎல் நடத்து சரியா? எனப் பலரும் கேள்வி எழுப்பிய சூழலில் தற்போது வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு பயோ பபுள் முறையிலும் தொற்று உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மீண்டும் இந்த கேள்வி எழும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.