மேலும் அறிய

'கோவிந்தா...கோவிந்தா'...150 ஆண்டுக்கு பின் நடந்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் : 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டமானது 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி, பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 150 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் 32 அடி உயரம் உள்ள அலங்கரிக்கப்பட்ட தேரில் லட்சுமி நரசிம்மர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத்தொடர்ந்து கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுடன் லட்சுமி நரசிம்மர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூவரசன்குப்பம் கிராமத்தில் உள்ள பல்வேறு வீதிகளின் வழியாக லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் வீதியுலா வந்து கொண்டிருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி பூவரசன்குப்பத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?

Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..

Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!
Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!
Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!

Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?

Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்

Embed widget