Vastu Tips: வாழ்க்கையில் ஒளி வீச.. வீட்டு ஜன்னல்கள் எப்படி அமைய வேண்டும்? - வாஸ்து டிப்ஸ்!
நம்முடைய வீடு என்பது ஒருவர் மட்டும் வாழும் இடமல்ல. அது நம் தலைமுறையின் கூடாக பார்க்கப்படுகிறது. வீட்டின் வாசல் தொடங்கி வீட்டிற்கு ஏற்றப்படும் விளக்கு வரை பல விஷயங்கள் வாஸ்துவால் குறிப்பிடப்படுகிறது.

வாழ்க்கையில் எப்படியாவது சொந்தமாக ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமாக இருக்கும். அதுவரை வாடகை வீட்டில் வசிப்போம். ஆனால் நாம் எந்த வீட்டில் வசித்தாலும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நிலம் அடிப்படை சாஸ்திரமான வாஸ்துவை நாம் சரியாக பின்பற்றினால் வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சிகள் வரும். இப்படியான நிலையில் ஒரு வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் வாஸ்துவின் படி நேர்மறை ஆற்றலுக்கும் ஏற்றவையாக உள்ளது. ஒரு வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவை வெளிச்சம் வரும் பகுதியாக மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் என்னென்ன வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் நாம் காணலாம்.
நம்முடைய வீடு என்பது ஒருவர் மட்டும் வாழும் இடமல்ல. அது நம் தலைமுறையின் கூடாக பார்க்கப்படுகிறது. வீட்டின் வாசல் தொடங்கி வீட்டிற்கு ஏற்றப்படும் விளக்கு வரை பல விஷயங்கள் வாஸ்துவால் குறிப்பிடப்படுகிறது. அப்படியான நிலையில் நாம் ஒரு வீட்டை கட்டும்போது ஜன்னல்கள் விஷயத்தில் சமரசம் செய்துக் கொள்கிறோம். வாஸ்து சாஸ்திரத்தின்படி ஜன்னல்கள் எண்ணிக்கை எப்போதும் இரட்டைப்படை எண்ணாக இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
இவை வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். சில வீடுகளில் ஒற்றைப்படை எண்ணில் ஜன்னல்கள் இருக்கும். அவை எதிர்மறை ஆற்றல் விரைவாக பரவ காரணமாக அமையும்.அதேபோல் வீட்டில் அமையவிருக்கும் ஜன்னல்கள் திசை ஆரோக்கியம் மற்றும் செல்வத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
அதன்படி காலை சூரிய ஒளி மற்றும் புதிய காற்று வீட்டுக்குள் நுழையும் பொருட்டு கிழக்கு திசையில் நல்ல பெரியதாக இருப்பது சிறந்தது. ஒருவேளை வீட்டின் சூழல் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு திசையில் ஜன்னல் இருந்தால் அவை சிறிய அளவில் இருப்பது சிறந்தது. மேலும் ஜன்னல்கள் எப்போதும் சம உயரம், நீளத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஒன்று பெரியது, இன்னொன்று சிறியதாக வைக்க வேண்டாம்.
இந்த ஜன்னல்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஜன்னல் கதவுகள், தாழ்ப்பாள் உடைந்து விட்டால் உடனடியாக மாற்றி விட வேண்டும். அதேபோல் அடைத்தாலும் எப்போதும் வெளிச்சம் தருகிறது என்பது ஜன்னல்களை அப்படியே மூடியிருக்கக் கூடாது. பகலில் சிறிது நேரமாவது திறந்திருக்க வேண்டும். அதேபோல் வாடகை வீடாக இருந்தால் ஒற்றைப்படை விஷயத்தில் கவலைப்பட வேண்டாம். அத்தகைய ஜன்னல் அருகே வாஸ்து நீக்கும் பொருட்களை வைக்கலாம்.
(இந்த கட்டுரையானது வாஸ்து சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















