மேலும் அறிய

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

நாளை அதிகாலை 5 மணி அளவில் ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்த வள்ளி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்.
 
ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் ( vaikunda perumal temple )
 
புண்ணிய நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்வதும், ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் வைகுந்த வள்ளி சமேத வைகுந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மார்கழி மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் பரமபத வாசல் திறக்கப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் தளத்தில் உள்ள அரங்கநாதன் பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம்.

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?
 
அதன்படி மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி வைகுந்த பெருமாள் திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைகுந்த பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் இதனைத் தொடர்ந்து வைகுந்த பெருமாள் கருட சேவை உற்சவம் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.

Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி தெரியுமா?

Vaikunta Ekadasi 2023 in Tamil: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில், மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் கருதப்படுகிறது. மார்கழி மாதம் வந்தாலே வைணவத் தளங்கள் களைகட்டி காணப்படும்.

வைகுண்ட ஏகாதசி 
இந்த மார்கழி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழித்து கோயிலில் சாமி தரிசனம் செய்தால் ஏராளமான நன்மைகளும், புண்ணியமும் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். அந்த வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது தெரியுமா. இதில் விரிவாக காணலாம்.


Vaikunta Ekadasi: ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் வாசல்..! காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா ?

விண்ணுலகத்தில் தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் ஒருவன் அச்சுறுத்தி வந்தான். இதனால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அவனது சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.  தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு முரனிடம் போரிட்டார்.

பிறந்தது எப்படி?


முரனிடம் போரிட்டு அந்த போரில் மகாவிஷ்ணு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணுவிடம் தோல்வியை தழுவிய முரன் மகாவிஷ்ணுவை நோக்கி வாளுடன் பாய்ந்து வந்தான். அப்போது, மகாவிஷ்ணு தன் உடலில் இருந்து மாபெரும் சக்தி ஒன்றை பெண்ணாக வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனுடன் போரிட்டார். அந்த பெண் முரனை வென்றார்.


அந்த அசுரனை வீழ்த்தி தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்கள் வைகுண்ட ஏகாதசி உருவானதாக கூறுகின்றன.

தலைப்பு செய்திகள்

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget