Vaikunta Ekadasi: சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை அழைத்த நம்மாழ்வார்; கோவிந்தா கோஷமிட்ட பக்தர்கள்
மேலூர் அழகர்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று அதிகாலை நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அழகர் கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாகும். இந்த நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள். "எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதேசி திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!