மேலும் அறிய

Ugadi 2023: தெலுங்கு வருடப்பிறப்பு.. யுகாதி பண்டிகையின் வரலாறும், முக்கியத்துவமும்..!

தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’(Ugadi) எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’(Ugadi) எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மார்ச் 22-ம் தேதி (புதன்கிழமை) தெலுங்கு புத்தாண்டு(Telugu New Year) கொண்டாடப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது.ஒடிசாவில்  இது  ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில், ‘பொய்லா  பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது  மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால்,  இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. 

யுகாதி அன்று செய்யப்படும் பிரசாதம்:

வேப்பிலை, உப்பு, மாங்காய், புளி, இனிப்பு சேர்த்து செய்யப்படும் பிரசாதம் செய்யப்படுகிறது. பண்டிகை அன்று காலை எண்ணெய் தேய்த்து குளியல் செய்தபிறகு பூஜை மேற்கொள்ளலாம். வேப்ப இலையால் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, மற்ற இனிப்பு பலகாரங்களை அனைவரும் பகிர்ந்து தரலாம்.

பச்சடி என்ற சிறப்பு உணவு ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கப்படுகிறது. இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய அனைத்து சுவைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய உகாதி உணவாக பச்சடி உள்ளது. புத்தாண்டில் அனைத்து விஷயங்களையும் அனுபவிக்கும் சமமான மன நிலையை உருவாக்க வேண்டும் மற்றும் அதை ஏற்றுக்கொண்டு முழுமையாக வாழ வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்கான அடையாளமாக இது உள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு, சிலர் தங்கள் வீட்டிற்கு வெள்ளை வர்ணம் பூசுவார்கள். மேலும், வீட்டு வாயிலில் ரங்கோலி வரையப்படும். வீட்டைச் சுற்றி அலங்கரிக்க மா இலைகள் பயன்படுத்தப்படும். புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் யுகாதி அன்று தொடங்கப்படும் புது காரியங்கள் வெற்றியடையும் என நம்பப்படுகிறது. 

யுகாதி வரலாறு, முக்கியத்துவம்:

யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இது இந்து சந்திர நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. 
 
யுகாதி அன்று மொரீஷியஸ் நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு கணிசமான அளவு இந்துக்கள் வாழ்வதால் யுகாதிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Independence High School ISA (@indy.isa)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget