Today Rasipalan 25 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் இன்று கட்டம் சொல்வது இதுதான்!
Today Rasipalan: ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 25ஆம் தேதி) எந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 25, 2024:
மேஷ ராசி
பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மிதுன ராசி
தந்தைவழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
கடக ராசி
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
சிம்ம ராசி
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
கன்னி ராசி
பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
துலாம் ராசி
உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
தனுசு ராசி
சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்தகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நலம் நிறைந்த நாள்.
மகர ராசி
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகள் மூலம் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
கும்ப ராசி
வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தியற்ற சூழ்நிலை ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சோர்வு மறையும் நாள்.
மீன ராசி
சமையல் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

