மேலும் அறிய

திருவண்ணாமலை கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தளங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவம் நடைபெறும்.  அதேபோன்று ஆண்டுக்கு நான்கு முறை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம், ஆனி பிரம்மோற்சவம் உற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் உற்சவம் மற்றும் ஆடி பூரம் உற்சவம் ஆகியவற்றை நடைபெறும். அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம் உண்ணமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும், ஜோதிட ரீதியாக ஆடி மாதம் சந்திரன் வீடான கடக ராசிக்கு சூரியன் வரும் காலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சூரியன் தென் திசை நோக்கி இந்த மாதத்தில் தான் பயணத்தை தொடங்கும். அதன்படி இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி, பூரண நட்சத்திர அமாவாசை, ஆடி 18 ஆகிய நாட்களில் அம்மன் கோவில்களில் வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது. இதனால்தான் கிராமப்புறங்களில் கூழ் வார்த்தால், பூ கரகம் எடுத்தல், தீமிதி திருவிழா வழிபாடுகள் நடைபெறும். 

திருவண்ணாமலை கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ கொடியேற்றம் 

ஆடிப்பூரம் பிரம்மோற்சவ தொடக்கமாக, இன்று ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அதிகாலையில், 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன், உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதன்பிறகு விநாயகருக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பரணி நட்சத்திரம் கடக லக்னத்தில் இன்று காலை 7.00 மணி அளவில் தங்க கொடிமரத்தில்  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக  நடைபெற்றது.  அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும்  விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

திருவண்ணாமலை கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

 பத்து நாட்கள் விநாயகர் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியுலா 

விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடைபெறும். அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அண்ணாமலையார் கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, வரும் 29ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர். கொடியேற்றத்தை காண 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat RatnaRahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK StalinNayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
Veera Dheera Sooran: ஆக்ஷனில் ருத்ர தாண்டவம் ஆடிய சீயான் விக்ரம்! வெளியானது 'வீர தீர சூரன்' ட்ரைலர்!
Veera Dheera Sooran: ஆக்ஷனில் ருத்ர தாண்டவம் ஆடிய சீயான் விக்ரம்! வெளியானது 'வீர தீர சூரன்' ட்ரைலர்!
Embed widget