மார்கழி மாத பௌர்ணமி: ஊஞ்சல் சேவையில் அம்பாள் அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்
தும்பவனத்தம்மன் கோயிலில் மார்கழி மாத பௌர்ணமிய ஒட்டி ஊஞ்சல் சேவையில் அம்பாள் அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்
ஆருத்ரா தரிசனம்:
சிவாலயங்களில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் கொண்டாடப்படும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானின் தாண்டவ கோலத்தை தரிசிப்பதே ஆருத்ரா தரிசனம் ஆகும். 2023 ஆம் ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் நாளை அனுசரிக்கப்படுகிறது. வழக்கமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
இதற்காக டிசம்பர் 18 ஆம் தேதி சிதம்பரம் நடாராஜர் கோயிலில் கொடி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலரும் தேர் முன் மா-கோலம் போட்டு பக்தியை வெளிப்படுத்தினர்.
திருவாதிரை களி செய்யும் முறை:
ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவிய பின் அதனை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வருக்க வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு ¼ கப் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு பொன்னிறமாகமாக வறுத்த பின் இரண்டையும் நன்கு ஆறவைக்க வேண்டும். பின் இதனை மிக்ஸியில் மையாக அரைத்து விடாமல் சற்று கொரகொரவென அரைக்க வேண்டும்.
அதேபோல் 1 ½ கப் வெல்லம் எடுத்து 3 கப் தண்ணீரை (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் )சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டியது, மீண்டும் அதனை அடிகனமான பாத்திரத்தில் வைத்து, அதில் அரைத்து வைத்த அரிசி கலவையை சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். களி பதம் வந்தபின் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, நெய்யில் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து கிளறினால் சூடான சுவையான திருவாதிரை களி ரெடி.