மேலும் அறிய

Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..

Margali 2022: மழை எப்படி பொழிய வேண்டும் என்பதை நான்காவது பாசுரம் மூலம் கண்ணபிரானிடம் எடுத்துரைக்கிறார், சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள்.

கி.பி- 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் ஆண்டாள், அந்த காலத்திலே மழை எப்படி பொழிகிறது என்பதை அறிந்துள்ளார்.

அறிவியல் அறிந்த ஆண்டாள்:

மழை எப்படி பொழிகிறது, நீரானது சூரிய ஒளியால் உறிஞ்சப்பட்டு, மேகமாக மாறி, பின் மழையாக மீண்டும் நிலத்தை அடைகிறது.

ஆண்டாள், மழை பொழியும் நிகழ்வை, மழையை கண்ணனாக பாவித்து, கடலில் இருந்து நீர் எடுத்து வந்து நிலத்தில் மழையாக பொழிய வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுதே, தமிழர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்றாகும்.

கண்ணனே மழையாக:

மேலும், கண்ணனிடம் கேட்கிறாள், மழை வளத்தை நீ கொடுக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்றால், உன்னுடைய உருவத்தை போல் இருக்க வேண்டும் கேட்கிறார்.

அதாவது, உன்னுடைய கருமை நிறம் போல மேகங்களும், உன்னுடைய கையில் உள்ள சக்கர ஆயுதம் போல மின்னலுடனும், மற்றொரு கைகளில் உள்ள வலம்புரி சங்கு போல இடி ஓசையுடனும், வில்லிருந்து புறப்படும் அம்பு போல மழை பொழிய வேண்டும் என கண்ணனிடம் கேட்கிறார்.

எனவே, கண்ணனே மழையாக வருகிறார். அத்தகைய மழை நீரில் நீராடலாம் என பிற மகளிரை அழைக்க செல்கிறார்.

Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்...

இதிலிருந்து, தமிழை அழகாக உருவகப்படுத்தி பாடல் அமைக்கும் வல்லமை ஆண்டாளுக்கு இருப்பதை அறியலாம்.

மேலும், இப்பாடலில் இருந்து, அக்காலத்து மக்கள் அறிவியல் புலமையும், தமிழ் புலமையும் அறியலாம். மேலும், மழையை இறைவனாக கருதுவதன் மூலம், எந்த அளவு மழைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகான தமிழில் அணி நயத்துடன் எடுத்துரைத்துள்ளார்.

Also Read: Margazhi 2022: மார்கழி 2ம் நாள்..! 2வது பாடல்..! ”புற அழகை விட அக அழகே சிறந்தது” என கூறும் சூடி கொடுத்த சுடர்கொடி

திருப்பாவை 4வது பாடல்:

 ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

Also Read: Thiruppavai: மார்கழி 3வது நாள்.. 3வது பாடல்... "பிறருக்காக தாழ்வது தாழ்வில்லை.. உயர்வே" என கற்றுத்தரும் ஆண்டாள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget