மேலும் அறிய

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது... ஆனாலும் கோயிலை சுற்றி வெடித்த பிரச்னை, என்ன காரணம் தெரியுமா?

திருப்பரங்குன்றம் பகுதியில் அமைதி நிலவும் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. நாளை வழக்கு விசாரணை வரவுள்ளதால் கலைந்துசென்ற இந்து முன்னணியினர்.

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முண்ணனியினர் கோவில் மற்றும் மலையை நோக்கி முற்றுகை போராட்டம் - தடுப்புகளை தள்ளிவிட்டு முற்றுகையிட முயன்றபோது தள்ளுமுள்ளு. 

திருப்பரங்குன்றம் தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து முன்னேறி சென்றபோது காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மலை மீது ஏற முயன்ற போது தடுப்புகளை உடைத்து இந்து முன்னணி அமைப்பினர் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீபத்தூணில் மனுதாரர் 6 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 62 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
தீபத்தூணில் தீபம் ஏற்ற கூறி போராட்டம்

பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நிர்வாக நீதிபதியிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு முறையீடு செய்யப்பட்டதால் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாதுகாப்பு பணிக்காக வந்த CISF படையினர் மீண்டும் திரும்பிச் சென்றனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பாக அமர்ந்து இந்து முன்னணி  மற்றும் பாஜகவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூறி போராட்டம் நடத்தினர்.
 
மலையைச் சுற்றி நடந்த போராட்டம்

முன்னதாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பகுதியில் பாஜக நிர்வாகி சூர்யா தலைமையில் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செல்வதற்காக சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பாஜக நிர்வாகி SG சூர்யா மயங்கிவிழுந்த நிலையில் தண்ணீர் தெளித்து அழைத்துசென்றனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக 16 கால் மண்டபத்திற்கு முன்பாக நடைபெறும் சொக்கப்பனை நிகழ்விற்கு சுவாமி உலா வருகை சிறிதுநேரம் தாமதமானது. பின்னர் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சொக்கப்பனை நிகழ்வு முடிவடைந்து. தாமதமான நிலையில் சுவாமி வீதி உலா ரத வீதி வழியாக  செல்லாமல் சன்னதி தெரு வழியாக சுவாமி சன்னதி வழியாக மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தது.
 

தலைப்பு செய்திகள்

சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget