மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல்வெளிக்கு வந்தார். அங்கு நம்பெருமாள் மாலை 6 மணிவரை தங்ககுதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜன சேவையும் நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த  திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம்

இதனை தொடர்ந்து திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக் கொள்ளையன் ஆனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது. இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல்வெளிக்கு வந்துவிடுவதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை. 10-ம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Embed widget