மேலும் அறிய

தஞ்சை கரந்தை கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி ஏழூர் பல்லாக்கு விழா

ஏழூர் புறப்பாடு முடிந்ததும் நாளை (25ம் தேதி) சுவாமி கோயிலுக்கு வந்தடைந்ததும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கும். 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா முன்னிட்டு ஏழூர் பல்லாக்கு விழா இன்று நடந்தது. நாளை பொம்மை போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

தஞ்சாவூர் கரந்தையில் பெரியநாயகி அம்பாள் சமேத கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது. 

இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதி

தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச் சிறப்புமிக்கதாக கருணாசாமி கோயில் விளங்குகிறது.

தஞ்சை கரந்தை கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி ஏழூர் பல்லாக்கு விழா

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்

இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது.

வசிஷ்டர் – அருந்ததி சிற்ப உருவங்கள் காணப்படும் கோயில்

சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோயிலாக இந்த கோயில் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத கோயில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய கோயில். 

பெரிய கோயிலுக்கு முன்பே கட்டப்பட்டது

தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா முன்னிட்டு  ஏழூர் பல்லாக்கு திருவிழா கடந்த 9ம் தேதி,  அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. 13ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.

கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளிய சுவாமிகள்

இன்று காலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், கந்தர் மற்றும் தனி அம்மன் பல்லாக்கில் எழுந்தருளினர். மேலும் வெட்டிவேர் பல்லாக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின்னர் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்து பக்கர்கள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

ஏழூர் வலம் வரும் பல்லாக்குகள்

பின்னர் பல்லாக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோயில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் கோயில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் ( திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோயில் (கூடலூர்), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோயில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோயில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் சுவாமி புறப்பட்டு சென்றன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏழூர் புறப்பாடு முடிந்ததும் நாளை (25ம் தேதி) சுவாமி கோயிலுக்கு வந்தடைந்ததும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget