மேலும் அறிய

' ஓம் சக்தி, பராசக்தி ' பக்தி பரவசத்தில் காஞ்சி மக்கள்..! தங்க திருத்தேர் பவனி..!

KANCHIPURAM KAMAKSHI AMMAN TEMPLE " பக்தி பரவசத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் "

லஷ்மி,சரஸ்வதி தேவியருடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க திருத்தேரில் பச்சை நிற பட்டு உடுத்தி,பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில்  உற்சவர் காமாட்சியம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பு
 
தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து
 
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றதும், மகா சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் வரும் , வெள்ளிக்கிழமையை அன்று  தங்க தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் தங்க தேர் பவனியானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
 

 ஓம் சக்தி, பராசக்தி ' பக்தி பரவசத்தில் காஞ்சி மக்கள்..! தங்க திருத்தேர் பவனி..!
அதையொட்டி மூலவர் காஞ்சி காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிசேஷக ஆராதனைகள் நடந்தேறிய பிறகு, பச்சை நிற பட்டு உடுத்தி, வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் காஞ்சி ஸ்ரீ  காமாட்சி அம்பாள், சரஸ்வதி,லட்சுமி தேவியருடன் கோவிலிருந்து புறப்பட்டு, சன்னதி வீதிகளில் வலம் வந்து, அதன் பின்னர் கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
 
சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
 
அதனையடுத்து  தங்க தேரில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ  காமாட்சியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்க தேரை கோவில் உட்பிரகாரத்தில் வடம்பிடித்து இழுத்து சென்று காஞ்சி  காமாட்சி அம்பாளை வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்து அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.
 

 ஓம் சக்தி, பராசக்தி ' பக்தி பரவசத்தில் காஞ்சி மக்கள்..! தங்க திருத்தேர் பவனி..!
மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டர பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும்,வெளி மாநில, வெளியூர் பக்தர்களும் என ஏராளமானோர் பங்கேற்று காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாளை தங்கள் நெஞ்சம் நிறைய பயபக்தியுடன் தரிசித்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும்,அம்பாளின் அருட்பிரசாதாங்களும்  வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் , நடைபெறும் வெள்ளித் தேரோட்டத்தை பார்த்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
 
காஞ்சி காமாட்சி வரலாறு :

 காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான் என நம்பிக்கை நிலவுகிறது.


 ஓம் சக்தி, பராசக்தி ' பக்தி பரவசத்தில் காஞ்சி மக்கள்..! தங்க திருத்தேர் பவனி..!
 
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என்பது நம்பிக்கை. பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள் என்பது நம்பிக்கை.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chithirai Kani Kanuthal: சித்திரை கனி காணுதல் பலன்கள்.. ஏப்ரல் 14ம் தேதி இதை செய்ய மறக்காதீங்க!
Chithirai Kani Kanuthal: சித்திரை கனி காணுதல் பலன்கள்.. ஏப்ரல் 14ம் தேதி இதை செய்ய மறக்காதீங்க!
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !
TVK Vijay: விஜய் வெளியே வந்தால் துர்மரணம் நிகழும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Vijay: விஜய் வெளியே வந்தால் துர்மரணம் நிகழும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs MK Stalin: “இந்த கட்டதுரை திருந்தவே மாட்டார்“; பிரசாரத்தின்போது ஸ்டாலினை விட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி
“இந்த கட்டதுரை திருந்தவே மாட்டார்“; பிரசாரத்தின்போது ஸ்டாலினை விட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி
Trump Warning Hormuz: “நீங்க என்ன தடுக்கறது, நாங்களே தடுக்கறோம்“; ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை; ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை
“நீங்க என்ன தடுக்கறது, நாங்களே தடுக்கறோம்“; ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை; ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Kia Sonet Next-Gen: காம்பேக்ட் SUV-க்களில் செல்லப்பிள்ளை.! புதிய அவதாரத்தில் கியா சோனெட்; இந்தியாவில் எப்போ அறிமுகம்.?
காம்பேக்ட் SUV-க்களில் செல்லப்பிள்ளை.! புதிய அவதாரத்தில் கியா சோனெட்; இந்தியாவில் எப்போ அறிமுகம்.?
Embed widget