Thaipusam 2024: பழனியில் காவடிகளை எடுத்து கிரிவல பாதையில் ஆடி, பாடி பக்தர்கள் வழிபாடு
பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலை கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் பல்வேறு விதமான காவடிகளை எடுத்து கிரிவல பாதையில் ஆடி பாடி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இன்று தைப்பூசத் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!
புனித நதிகள் ஆன சண்முக நதி இடும்பன் குளம் பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடி விட்டு பக்தர்கள் கையில் சூடம் வேண்டிய படி புனித நதிகளில் நின்று சூரிய பகவானை தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதையில் பக்தர்கள் ஆடி பாடியும், பால் காவடி ,பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்தும் அழகு குத்தியும் வந்து ஆடிப்பாடி கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர் .
பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலை கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே பக்தர்கள் போலீசார் கயிறுகளை வைத்து தடுத்து நிறுத்தி குறைந்த அளவிலான பக்தர்களையே மலை கோவிலுக்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வகையில் தடுத்து மலைக் கோவிலுக்கு அனுப்பி வருகின்றனர்.கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி தங்குமிடம் வசதி மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 350 சிறப்பு பேருந்துகளும் ரயில்வே நிறுவனம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது பக்தரின் பாதுகாப்பு வசதிக்காக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.