![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்துள்ளார்.
![காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு! AIADMK former minister KP Anbazagan daughter in law Purnima has died காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/86c2799c3f1d92e72b5acde82f3659a21706150930325572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு:
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தற்போது ஐந்தாவது முறையாக பாலக்கோடு தொகுதி எம்எல்ஏவாக நீடிக்கிறார். அதிமுகவிலும், அமைப்பு செயலாளர், தருமபுரி மாவட்ட செயலாளர் பதவிகளை வகிக்கிறார்.
இவர், காரிமங்கலம் அருகே அள்ளி என்ற கிராமத்தில் தனது வீட்டில் குடும்பத்தினருடம் வசித்து வருகிறார். அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சந்திரமோகனுக்கு சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமாவுக்கும் கடந்த 2019ல் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
விளக்கு ஏற்றியபோது ஆடையில் தீ:
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி மருமகள் பூர்ணிமா வீட்டில் விளக்கு ஏற்றியபோது, அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில், அவருக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, உடனடியாக பூர்ணிமாவை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் சந்தேகத்துக்குரியது கிடையாது என்றாலும், திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மருமகள் பூர்ணிமா உயிரிழந்தது அதிமுக முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)