Thaipusam Viratham: இன்னும் இரண்டு நாட்களில் தைப்பூசம்... முருக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறை..!
Thaipusam Viratham 2023: தைப்பூச தினத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து முருகனை வழிப்படுவர்.
Thaipusam Fasting Procedure in Tamil: இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்(Thaipusam). தமிழ்நாடு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருக பெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருக பெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
தைப்பூசம்:
தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி காலை முதலே இந்த நட்சத்திரம் இருப்பதால் அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
விரதம்:
இந்த தைப்பூச தினத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து முருகனை வழிப்படுவர். மார்கழி மாதம் தொடங்கும் இந்த விரதமானது தைப்பூசம் வரை நீடிக்கும். இந்தநிலையில், தைப்பூச விரதம் இருக்கும் முறை எப்படி என்பதை கீழே காணலாம்...
- விரதம் இருக்கும் முருக பக்தர்கள் தினமும் அதிகாலை எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி முருகனை வழிபடுவார்கள்.
- காலை, மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு, இரவு நேரத்தில் உணவு எடுத்து கொள்வர்.
- இருவேளையும் கோயிலுக்கு சென்றால் சிறப்பு அல்லது ஒரு வேளையாவது முருகனை தரிசிக்க வேண்டும்.
- முருகனை தவிர தைப்பூச தினத்தில் சிவன், குரு பகவான் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.
- வேல் வழிபாடு என்பது தைப்பூசத்தில் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று
- அன்றைய நாளில் முருகனுக்கு நெய்வைத்தியங்களான சர்க்கரை பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபடலாம்.
- கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் உள்ளிட்ட முருகனுக்கு உகுந்த பாடல்களை தைப்பூச தினத்தில் பாடி வழிபடாலம். மேலும், ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் மன தைரியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விரதமிருப்பதால் கிடைக்கும் பலன்கள்:
தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருக பெருமானை வழிபடுவதால் நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். குழந்தை ஆயுள், திருமண யோகம், குடும்ப ஒற்றுமை என அனைத்தும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
தைப்பூச விரதம்(Thaipusam Fasting):
4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்ணமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்ணமி உள்ளது. அன்றைய தினம்தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. சிலர் திதியை வைத்து 4ஆம் தேதி என கூறுகின்றனர், ஒரு சிலர் நட்சத்திரம் வைத்து பிப்.5ஆம் தேதி என்கின்றனர்.
பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்யப்படுகிறதோ அதே நெய்வேத்தியத்தை நாமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம்.