Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பூஜைகள், சடங்குகள் இன்று தொடங்கியது.
அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டைக்கான முறையான பூஜை சடங்குகள் தொடங்கியுள்ளது. முதலில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி பரிகார பூஜையுடன் முறைப்படி தொடங்கப்படும். வழிபாட்டு முறை காலை 9:30 மணிக்குத் தொடங்கி 5 மணி நேரம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோகிதர் பரிகார வழிபாட்டுடன் பூஜையைத் தொடங்கியுள்ளார்.
Shri Ram Janmbhoomi Teerth Kshetra shares details of 'Prana Pratishtha' and related events.
— ANI (@ANI) January 15, 2024
"Following all the Shastriya protocols, the programme of Prana Pratistha will be held in the Abhijeet Muhurta in the afternoon. The formal procedures of pre-Prana Pratistha sacraments… pic.twitter.com/Q7ZwjsgaAC
பிரயாஷித் வழிபாடு என்றால் என்ன?
பரிகார பூஜை என்பது உடல், அகம், மனம், புறம் என மூன்று வழிகளிலும் பரிகாரம் செய்யும் வழிபாட்டு முறையாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, வெளிப்புற பரிகாரத்திற்காக 10 சடங்குகள் செய்யப்படுகின்றன. இதில், பஞ்ச திரவியம் தவிர, பல மருத்துவ பொருட்கள் மற்றும் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.
பிரயாஷித் பூஜை யாரை வழிபடுகிறது?
சில புனிதமான வேலைகளைச் செய்ய சடங்கு அல்லது யாகம் செய்யப்படுகிறது. அதில் அமர்வதற்கு புரோகிதருக்கு மட்டுமே உரிமை உண்டு. இந்த கடமையை புரோகிதர் செய்ய வேண்டும். பொதுவாக பண்டிதர் இதை செய்ய வேண்டியதில்லை. ஆனால் புரோகிதர் இந்த வகையான வழிபாட்டை செய்ய வேண்டும்.
இதற்குப் பின்னால் உள்ள அடிப்படைக் கருத்து என்னவென்றால், நாம் அறிந்தோ அறியாமலோ எந்த வகையான பாவம் செய்தாலும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் உணராத பல வகையான தவறுகளை நாம் செய்கிறோம், எனவே ஒரு சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. இதை புனிதமான காரணம் என்று ஐதீகம் சொல்வதாக நம்பப்படுகிறது.
கர்ம குடி பூஜை என்றால் என்ன?
கர்ம குடி என்றால் யக்ஞசாலை வழிபாடு. விஷ்ணுவை வழிபட்ட பின்னரே வழிபாடு செய்து, சம்பிரதாயப்படி வழிபாட்டிற்காக உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறார். ஒவ்வொரு பகுதியிலும் நுழைவதற்காக ஒரு பூஜை செய்யப்படுகிறது. அந்த பூஜையை செய்துவிட்டு, உரிமை பெற்ற பிறகு, உள்ளே சென்று பூஜை செய்யப்படும்
இது எவ்வளவு நேரம் நடைபெறும்?
பரிகார பூஜைக்கு குறைந்தது ஒன்றரை முதல் 2 மணி நேரம் ஆகும், விஷ்ணு பூஜையும் அதே நேரம் எடுக்கும், அதாவது பூஜை சடங்கு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரம் நடைபெறும். இந்த பூஜையை 121 பேர் கொண்ட குழு மேற்கொள்வார்கள்.
அயோத்தி ராமர் கோயிலில் வழிப்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை:
- ஜனவரி 16ஆம் தேதி முதல் வழிபாடு தொடங்கும்.
- ஜனவரி 17 ஆம் தேதி ஸ்ரீவிக்ரஹத்தின் வளாகத்தைப் பார்வையிடவும், கருவறையை சுத்தப்படுத்தவும் பூஜைகள் நடைபெறும்
- ஜனவரி 18 ஆம் தேதி வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.
- ஜனவரி 19 அன்று காலையில் பழம் மற்றும் தானியங்கள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
- ஜனவரி 20-ம் தேதி காலையில் மலர்கள் மற்றும் ரத்தினங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கிரித் ஆதிவாசமும் நடைபெறும்.
- ஜனவரி 21ஆம் தேதி காலை சர்க்கரை, இனிப்பு, தேன், மருந்து கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
- ஜனவரி 22 அன்று, நடுப்பகல் வேளையில், ராமர் சிலயின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி அகற்றப்பட்டு, கண்ணாடி முன் வைத்து காட்டப்படும். இது முக்கியமான நிகழ்ச்சியாகும்.