![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sorgavasal Thirappu: நாளை திறக்கும் சொர்க்கவாசல்... இறைவனை வணங்கினால் வைகுண்டம் அடையலாம்: சுவாரஷ்ய தகவல்கள்
Sorgavasal Thirappu 2023: 2023 ஆண்டில் நடைபெற இருக்க கூடிய வைகுண்ட ஏகாதசி குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
![Sorgavasal Thirappu: நாளை திறக்கும் சொர்க்கவாசல்... இறைவனை வணங்கினால் வைகுண்டம் அடையலாம்: சுவாரஷ்ய தகவல்கள் Sorgavasal Thirappu Time Vaikunta Ekadasi 2023 Paramapada Vasal Opening Moolavar Muthangi seva Irappathu Sorgavasal Thirappu: நாளை திறக்கும் சொர்க்கவாசல்... இறைவனை வணங்கினால் வைகுண்டம் அடையலாம்: சுவாரஷ்ய தகவல்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/8edd778e42e27585925bfa3dda737f811672575968067571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிறப்பான பலனை தருவதாக நம்பக்கூடிய வைகுண்ட ஏகாதசி பற்றியும், 2023 ஆண்டில் நடைபெற இருக்க கூடிய வைகுண்ட ஏகாதசி, எந்த நாளில் வருகிறது என்பதையும் பார்க்கலாம்.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார், இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஏகாதசி:
ஏகாதசி என்பது 11 ஆம் நாள் என்று பொருள், ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம் என அழைக்கப்படுகிறது.
கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புகளின் மூலம், வெளியுலக அறிவை அடைவதால், இந்த உறுப்புகளுக்கு ஞானேந்திரியங்கள் என அழைக்கப்படுகிறது. கர்மேந்திரியங்கள் என்பவை காரியங்கள் என்று சொல்ல கூடிய செயல்கள். பேச உதவும் வாய், பொருட்களை எடுக்க உதவும் கைககள், நடப்பதற்கு உதவும் கால்கள், கழிவுகளை வெளியேற்ற உதவும் உறுப்பு, பிறப்பு உறுப்பு ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் என அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி:
ஆண்டுதோறும் 24 அல்லது 25 ஏகாதசி வரும். அனைத்து ஏகாதசியிலும் விரதம் இருந்து வழிபடுவோர், துயரங்கள் நீங்கி வைகுண்டத்தை அடைவர் என நம்பிக்கையாக கூறப்படுகிறது.
வருடம் முழுவதும் வரக்கூடிய ஏகாதசியை கடைப்பிடிக்காதவர்கள், மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசியையாவது கடைப்பிடிப்பது சிறப்பான பலனைத் தரும் என கருதப்படுகிறது. மேலும், இந்த ஏகாதசியானது மூன்று கோடி பலனை தரக்கூடியது என்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு:
மார்கழி மாத ஏகாதசியான, வைகுண்ட ஏகாதசியானது 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாத 2 ஆம் நாளில், தமிழ் மாதமான மார்கழி மாதம் 18 ஆம் நாளில் திங்கள் கிழமை வருகிறது. அன்று அதிகாலை 4. 45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து, சொர்க்கவாசல் நிகழ்வில் பங்கு கொள்வது சிறப்பான பயணை தரும் என நம்பப்படுகிறது.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 15: மார்கழி 15:..செய்த தவறை ஏற்றுக்கொள்ளும் பண்பை, மேன்மைப்படுத்தி காண்பிக்கும் ஆண்டாள்...
தொடர்ந்து படிக்க: 22வது திவ்ய தேசமா? 23 -வது திவ்ய தேசமா? மயிலாடுதுறையில் பக்தர்கள் குழப்பம்!....
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)