Soorasamharam 2024: சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடப்படுகிறது..? முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ?
Soorasamharam: சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி 2024 ( நாளை) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

தமிழ் கடவுள் முருகப் பெருமான் பலருக்கும் மிகவும் பிடித்த இஷ்ட தெய்வத்தில் ஒருவராக இருந்து வருகிறார். பிற இடங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் இந்து மக்கள், முருகப்பெருமானை பல நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர். சங்க காலத்தில் இருந்தே முருக வழிபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் முருகர் கோயில்களில் மிக விமர்சியாக கொண்டாடப்படும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி 2024 (நாளை) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்விற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சஷ்டி விரதம் என்றால் என்ன ?
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். அதில் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்ற பெயர் உண்டு அதை தான் கந்தசஷ்டி என அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் அசுரனுடன் போர் புரிந்த நாட்கள் கந்த சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் விரதம் இருந்து, விரதத்தின் கடைசி நாளான ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும்.
சூரசம்ஹாரம் என்றால் என்ன ?
புராண காலத்தில் சூரபத்மன் அசுரன் வாழ்ந்து வந்தான். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் சிவபெருமானிடம் சூரபத்மன், சாகாவரம் வேண்டும் என கேட்க அதற்கு சிவபெருமான் அப்படி ஒரு வரத்தை கொடுக்க முடியாது என கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருளி விட்டு செல்கிறார்.
சூரபத்மன் கிடைத்த வரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யாமல், தேவர்களை அடிமைப்படுத்தி நடத்தி வந்தான்.இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து சூரபத்மன் வெற்றி கொண்டான். வேறு வழி இல்லாமல் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.
உடன்பிறகு சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து, தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்டவாறு வளர்த்தெடுத்தனர். உடன்பிறகு ஆறு குழந்தைகளும் ஒரே ரூபமாக பார்வதி உதவியுடன் மாற்றப்பட்டு ஆறுமுகனாக அனைவருக்கும் காட்சி தந்தார் .
அதன்படி தனது தாயார் பார்வதியின் அறிவுரையின்படி சூரபத்மனை போரில் விழுத்தி தேவர்களை விடுவிக்க முருகப்பெருமாள் முடிவு செய்தார். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் தேவர்களை விடுவிக்க போவதில்லை போரை சந்திக்க தயார் என சூரபதமன் சூலூரைத்தார். இதன் பிறகு 6 நாட்கள் கடுமையாக போராடிகள் நடைபெறுகிறது.
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இன்றும் ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் இதுதான் நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

