Sevvai Peyarchi 2023: செவ்வாய் பெயர்ச்சி! மேஷம் முதல் மீனம் வரை நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன? ஜோதிடரின் கணிப்புகள் இதோ!
Chevvai Peyarchi 2023 Palangal: செவ்வாய் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் ஏற்படப்போகும் பலன்களை கீழே விரிவாக காணலாம்.
செவ்வாய் பெயர்ச்சி நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதையடுத்து, 12 ராசிக்கும் உள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.
மேஷ ராசி :
டிசம்பர் 29ஆம் தேதி நடக்கவிருக்கின்ற செவ்வாய் பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு மிகப்பெரிய ஏற்றமான காலகட்டம். உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணிக்கும் செவ்வாய் உங்களுக்கு அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுக்கப் போகிறார். வாசிக்க அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமரும் போது, எதிர்பாராத தன வரவு உண்டு. நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள். உடலில் இருக்கின்ற பிணி அகல கூடிய காலகட்டம் . குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீடு மனை சம்பந்தமான காரியங்கள் வெற்றியை கொடுக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.
ரிஷப ராசி :
அன்பான ரிஷப ராசி வாசகர்களே, செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை செய்யப் போகிறது என்று பார்க்கலாம். வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்படி பெயர்ச்சியாகும் செவ்வாய் உங்களுக்கு 12 ஆம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் பிரவேசிப்பதால். தொழிலில் எதிர்பாராத லாபம் வியாபாரத்தில் வெற்றி வேலையில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் போன்றவை வந்து சேரும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில் 12 ஆம் அதிபதி எட்டாம் வீட்டில் மறைவதால் சுப காரியங்களில் கலந்து கொள்ள போகிறீர்கள் சுபச் செலவுகளில் அதிகமான பணத்தை செலவு செய்ய வாய்ப்புள்ளது. 12 ஆம் அதிபதி எட்டாம் வீட்டில் செல்வதால் வெளிநாடு வெளி மாநிலம் போன்றவை உங்களுக்கு அனுகூலமாக அமையும்.
மிதுன ராசி :
மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் லாபாதிபதி அவர் ஏழாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். டிசம்பர் 29ஆம் தேதி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பெயர்ச்சி ஆகும் செவ்வாய் பகவான் எண்ணங்களை ஈடேற்றப் போகிறார் குறிப்பாக வீடு கட்டி குடி போவீர்கள் புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிட்டும் புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்கள் பகைவராவதும் பகைவர்கள் நண்பர்கள் ஆவதும் இந்த செவ்வாய் பெயர்ச்சியின் காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்படும் . நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். அனைத்தும் சுபமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்.
கடக ராசி :
அன்பான கடக ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவகத்தில் தனுசு ராசியில் அமரப் போகிறார். பத்தாம் பாவ அதிபதி ஆறாம் பாவத்தில் அமரும்போது அரசு சம்பந்தமான வேலை வாய்ப்புக்காக நீங்கள் தேர்வுகள் எழுதி இருந்தால் அதில் வெற்றி அடையப் போகிறீர்கள். அரசு அரசு சார்ந்த வேலைகள் பத்திரப்பதிவு போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். நிலம் வீடு தொடர்பான காரியங்களில் ஈடுபட போகிறீர்கள். ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்த்து மகிழ்வீர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்.
சிம்ம ராசி :
அன்பான சிம்ம ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்கிறார். சிம்ம ராசிக்கு முதல் தர யோகாதிபதியான செவ்வாய் பகவான் நான்காம் வீட்டிற்கும் ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதி ஐந்தாம் பாவத்தில் அமர்வதால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் . நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் புதிய வீடு மனை வாங்குவதற்கான யோகங்களும் அமையும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரும். தடைபட்ட திருமண பேச்சு வார்த்தை நடைபெறும் வாழ்த்துக்கள் வணக்கம்.
கன்னி ராசி :
அன்பான கன்னி ராசி வாசகர்களே செப்டம்பர் 29ஆம் தேதி செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் பெயர்ச்சி ஆகிறார். மூன்றாம் அதிபதி முயற்சிக்கு வெற்றிக் அதிபதி நான்காம் பாவமான சுகஸ்தானத்தில் அமரும்போது நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைக்கு வந்து சேரும். கன்னி ராசிக்கு தடைபட்ட காரியங்கள் செவ்வாய் பகவானால் நிறைவேற போகிறது. வீடு மனை சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிறு சிறு பிரச்சனைகள் வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறப் போகிறது வாழ்த்துக்கள் வணக்கம்.
துலாம் ராசி :
அன்பான துலாம் ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாகத்தில் பெயர்ச்சியாக போகிறார். வெற்றி ஸ்தான அதிபதி குரு பகவான் உங்களுடைய ராசியை ஏழாம் பாவகத்தில் இருந்து பார்வையிடும் அதே சமயத்தில் இரண்டாம் பாவாதிபதியும் ஏழாம் பாவாதிபதியுமான செவ்வாய் மூன்றில் அமர்ந்து வெற்றியை உங்களுக்கு உறுதி செய்யப் போகிறார் . எந்த காரியத்தை குறித்து நீண்ட நாட்களாக நடைபெற வேண்டும் என்று எண்ணி இருந்தீர்களோ அந்த காரியங்கள் நடைபெறப்போகிறது. வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கப் போகிறது. முகம் பொலிவு புத்துணர்வு பெறப்போகிறது. அனைத்துமே உங்களுக்கு ஜெயமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம் .
விருச்சிக ராசி :
அன்பான விருச்சிக ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாவத்தில் அமரப்போகிறார். உங்களுடைய ராசி அதிபதி செவ்வாய் ஆறாம் அதிபதியும் செவ்வாயாக இரண்டாம் பாவகத்தில் அமரும்பொழுது வேலை புதிய தொழில் போன்ற விஷயங்கள் மூலமாக இரட்டிப்பு லாபம், இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த தொழில் சம்பந்தமான காரியங்கள் உடனடியாக நடக்கப்போகிறது. ஆறாம் பாவ அதிபதி இரண்டாம் பாவத்தில் அமரும்போது வார்த்தையில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதை பெரிதாக வேண்டாம். அனைத்தும் வெற்றியாக அமையட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்.
தனுசு ராசி :
எனக்கு அன்பான தனுசு ராசி வாசகர்களே வரும் டிசம்பர் 29ஆம் தேதி உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் பகவான் அமர போகிறார் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதியும் 12 ஆம் அதிபதியுமான செவ்வாய் ராசியிலேயே அமர்வதால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன புத்திர பாக்கியம் தொடர்பான காரியங்கள் ஜெயமாக முடியப்போகிறது உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவகத்தில் குரு பகவான் அமர்ந்து ராசியிலேயே செவ்வாய் பகவானும் அமர்வதால் யோகம் யோகம் யோகம். செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை அடைந்து உங்களுடைய ராசியை ஜெயமாக்க போகிறார்கள். தொட்டது அனைத்தும் தொடங்கும் கேட்டது அனைத்தும் கிடைக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.
மகர ராசி :
அன்பான மகர ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி உங்களுடைய ராசிக்கு 12 ஆம் பாவகத்தில் செவ்வாய் பகவான் அமரப்போகிறார். செவ்வாய் உங்களுக்கு நான்காம் அதிபதியும் லாபாதிபதியும் ஆகி 12 ஆம் வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பிரயாணம் மூலமாக வெற்றி விரயங்கள் அதுவும் சுப விரயமாக இருந்து உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்க போகிறது. சுகாதிபதி 12ஆம் வீட்டில் அமர புதிய வாகனங்களில் நீங்கள் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல தகவல்கள் காதுக்கு வந்து சேரும் வாழ்த்துக்கள் வணக்கம்.
கும்ப ராசி :
அன்பான கும்ப ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதியான வெற்றிக்கு அதிபதி செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து அனைத்திலும் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். குறிப்பாக கும்ப ராசிக்கு ஜீவனாதிபதியான பத்தாம் அதிபதி பதினொன்றாம் பாவத்தில் அவர தொழில் ரீதியான வேலைவாய்ப்பு ரீதியான அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கப் போகிறது. நீண்ட நாட்களாக வேலையில்லாமல் தவித்து வந்த கும்ப ராசி வாசகர்களுக்கு இது ஒரு பொன்னான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் பிரிந்திருந்த தம்பதி ஒன்று கூடுவீர்கள். அனைத்திலும் வெற்றி வெற்றி வாழ்த்துக்கள் வணக்கம்.
மீன ராசி :
அன்பான மீன ராசி வாசகர்களே டிசம்பர் 29ஆம் தேதி உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாய் பகவான் பத்தாம் பாவமான தொழில ஸ்தானத்தில் அமர்ந்து யோகங்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். குறிப்பாக ஏற்கனவே நீங்கள் வேலை பார்த்து வந்தவராக இருக்கலாம் அல்லது புதிய வேலை தேடுபவராக இருக்கலாம் எப்படி இருந்தாலும் வேலை நிமித்தமாக தொழில் நிமித்தமாக உங்களுக்கு அனைத்தும் வெற்றியாக அமையப் போகிறது. மேலதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள் உடன் இருப்பவர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது வாழ்த்துக்கள் வணக்கம் !!!