மேலும் அறிய

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

கோட்டை மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விளங்குகிறது. சேலம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு பட்டிக்கும் நாயகியாக விளங்கக்கூடிய கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறும் நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

குறிப்பாக, கடந்த 18 ஆம் தேதி கோட்டை மாரியம்மன் திருக்கோவில் இடம் கொடுக்க விழா புதிய கொடி மரம் நிறுவுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட வைப்பவங்கள் நடைபெற்ற பின்னர் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடி மரம் நிறுவப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் பதியப்பட்டது.

குருக்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தினை வேதங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. மேலும் புதிய கொடி மரத்திற்கும் அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்த குட ஊர்வலம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. தீர்த்த குணமானது திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த யானை மாசிலா மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது வள்ளுவர் சிலை, கடைவீதி அக்ரகாரம் பெரிய கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வந்தடைந்தது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்தும், முளைப்பாரி பயிரை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க அம்மன் வேடமிட்டு பரவசத்தில் நடனமாடிய பக்தர்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர். 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா -நாளை உள்ளூர் விடுமுறை.

இதனையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கப்பட்டன. மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் புணரமைக்கப்பட்டு முதன்முறையாக குடமுழுக்கு நடைபெறுவதால் ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலுக்கு திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் வருகை புரிந்தார்.

கோயிலில் செய்யப்பட்டுள்ள திருப்பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்த அவர் கோயில் பராமரிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget