Sabarimala Temple: முடிந்த மகரவிளக்கு பூஜை; சபரிமலை சன்னிதானம் நடை எப்போது அடைப்பு?
திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். 20ம் தேதி ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அரச கோலத்தில் இருக்கும் ஐயப்பனை சாமி தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள். வரும் 18ஆம் தேதி வரை பக்தர்கள் அரச கோலத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம். அதற்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்படும் என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Israel Hamas Ceasefire Deal: அப்பாடா..! முடிவுக்கு வந்த 15 மாத காஸா போர், இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலையில் நேற்று முந்தினம் மகரஜோதி தரிசனம் நடைபெற்று இருக்கும் நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை சுவாமியே சரணம் ஐயப்பா என கோசம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், பந்தள அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணம் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற்ற நிலையில் பெரியாணை வட்டம், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மகர ஜோதி தரிசனம் தெரிந்த நிலையில், பக்தர்கள் மெய்சிலிர்க்க தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்திருக்கும் நிலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை சாமி தரிசனம் செய்துள்ளனர். வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. மகரஜோதி அன்று பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அரச கோலத்தில் தரிசனம் தருகிறார் ஐயப்பன்.
திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். 20ம் தேதி ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் திருவாபரண பெட்டி பந்தள அரண்மணைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்குப் பிறகு மாசி மாத பூஜைகளுக்காக சபரிமை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















