Sabarimala temple: மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாவராதனையும், இரவு 7 மணி முதல் புஷ்பா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகர விளக்கு சீசனை ஒட்டி கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து, தற்போது மகர விளக்கு பூஜை 2024 நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சென்ற மாதம் நவம்பர் 16ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்!
சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்ட முதல் நாள் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். உலகப்புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு பூஜை சீசன் சபரிமலையில் நடந்து வருகிறது.
சபரிமலை கோயில் நடை திறப்பு
கோவிலில் சிறப்பு பெற்ற மண்டல பூஜையானது வரும் சென்ற 26 ஆம் தேதி நடைபெற்றது . அதன் பின்பு அன்று இரவு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலையில் மண்டல பூஜை ஒட்டி 41 நாட்களில் 32,49,756 பக்தர்கள் சாமு தரிசனம் செய்தனர். இந்நிலையில் மகர விளக்கு பூஜை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்துரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாரதனை நடத்துகிறார்.
பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை திறந்திருக்கும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் காலை 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாவராதனையும், இரவு 7 மணி முதல் புஷ்பா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும். நடப்பு சீசனை ஒட்டி அடுத்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6:25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற இருக்கிறது.