மேலும் அறிய

Ayyappan Temple: ஐயப்பன் சன்னதியை திறந்த 16 வது மேல்சாந்தி... சபரிமலையில் குவியும் பக்தர்கள்

2024-25 மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய தலைமை அர்ச்சகர் (மலையாளத்தில் 'மேல்சாந்தி' என்று அழைக்கப்படுகிறார்) அருண் குமார் நம்பூதிரி நியமிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 மணியளவில் ஐயப்பன் சன்னதியை திறந்தார்.

Ayyappan Temple: ஐயப்பன் சன்னதியை திறந்த 16 வது மேல்சாந்தி... சபரிமலையில் குவியும் பக்தர்கள்

ஐயப்பன் கோவில் புதிய தலைமை அர்ச்சகர் அதாவது மலையாளத்தில் 'மேல்சாந்தி' என்று அழைக்கப்படுபவர் அருண் குமார் நம்பூதிரி. இவர்  கொல்லத்தில் உள்ள லெக்ஷ்மிநாதா கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், மாளிகைப்புரம் தேவி கோவிலின் தலைமை அர்ச்சகராக வாசுதேவன் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். லாட்டரி மூலம் தேர்வு செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் வாசுதேவன் இருவரும், ஓராண்டுக்கு அந்தந்த பதவிகளில் இருப்பார்கள். அதாவது 2024-25 ஆண்டு மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் 2024நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்திகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் 17ம் தேதி புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது. தேர்வு பட்டியல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 25 பேரும், மாளிகைபுரம கோவிலுக்கு 15 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

Ayyappan Temple: ஐயப்பன் சன்னதியை திறந்த 16 வது மேல்சாந்தி... சபரிமலையில் குவியும் பக்தர்கள்

இந்நிலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலையில் நேற்று நடந்தது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்தரேசன், சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர். அதில் ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார். இதேபோன்று மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஆவார். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்திகள் இருவரும் நவம்பர் 15-ந்தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல சபரிமலை ஐயப்பன் கோவிலில் பணியாற்றும் 16வது தலைமை அர்ச்சகராக அருண்குமார் ஆவார்.

பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இருந்த பந்தளம் அரச குடும்பத்தின் இளைய உறுப்பினரான ரிஷிகேஷ் வர்மாவால் 24 வேட்பாளர்களில் அருண்குமாரின் பெயர் எடுக்கப்பட்டது. அருணின் பெயர் டிராவில் இடம் பெறுவது இது ஆறாவது முறையாகும். மாளிகைப்புரம் தேவி கோவிலின் தலைமை அர்ச்சகர் பதவிக்கு பந்தளம் அரண்மனையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை விண்ணப்பித்த 15 பேரில் வாசுதேவனின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Ayyappan Temple: ஐயப்பன் சன்னதியை திறந்த 16 வது மேல்சாந்தி... சபரிமலையில் குவியும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் யாத்திரை முடிந்து மாளிகைப்புரம் தேவி கோவிலுக்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தரிசன முன்பதிவுகளை ஆன்லைனில் மட்டுமே திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ள நிலையில், இரண்டு அர்ச்சகர்களும் கோவில்களில் சேவை செய்வார்கள். உயர் நீதிமன்ற டிஆர் ராமச்சந்திரன் நாயரால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், தேவசம் ஆணையர் சி.வி.பிரகாஷ், சிறப்பு ஆணையர் ஆர்.ஜெயகிருஷ்ணன், தேவசம் உறுப்பினர்கள் ஏ.அஜிகுமார், ஜி.சுந்தரேசன் ஆகியோர் லாட்டரிக்கு வந்திருந்தனர். இரண்டு தலைமை அர்ச்சகர்கள் பற்றிய அறிவிப்பு உஷா பூஜைக்குப் பிறகு வெளியிடப்பட்டது இதனடிப்படையில் இன்று காலை 3 மணிக்கு ஐயப்பன் கோவில் சன்னதியை 16வது மேல்சாந்தி என்று அழைக்கப்படும் அர்ச்சகர் அருண்குமார் கோவில் சன்னதியை திறந்தார். கோயில் நடைதிறந்த பிறகு சாமியை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget