மேலும் அறிய
Advertisement
Ratha Saptami 2023: வரதராஜ பெருமாள் கோவிலில் களைகட்டிய விழா..கோவிந்தா கோவிந்தா என விண்ணைத்துளைத்த பக்தர்களின் முழக்கம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம், தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ரதசப்தமி உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சிகப்பு பட்டுடுத்தி, பச்சை நிற மனேரஞ்சித பூ மாலை, பஞ்சவர்ண மலர் மாலை திருவாபரணங்கள் அணிந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
பின்னர் மேளதாள வாத்தியங்கள் ஒலிக்க,வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர மாடவீதிகளில் திருவீதி உலா வந்தார். சூரிய பிரபை வாகனத்தில், வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
ரத சப்தமி என்றால் என்ன ?
ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இதுகுறிப்பாக சூரிய கடவுள் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளுக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வழிபாடு முறை?
ரத சப்தமியன்று வீட்டில் சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யலாம்.
கிடைக்கும் பலன்கள் என்ன ?
ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. இந்த பிறவி அல்லது கடந்த பிறவிகளில் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றின் மூலம் செய்த 7 வகையான பாவங்களையும் சூரிய பகவான் நீக்குவார் என்பது ஐதீகம். ரத சப்தமியன்று விரதம் இருந்தால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது. அதனால் இதனை ஆரோக்கிய சப்தமி என்றும் அழைக்கிறோம்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion