மேலும் அறிய
Advertisement
சிவராத்திரி பூஜையில் எகிப்து, சிரியாவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப பக்தர்கள் பிரார்த்தனை
ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை, 1008 பெண்கள் தங்களது கரங்களால் சிவனை பூஜித்து பக்தி பரவசம்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட எகிப்து மற்றும் சிரியாவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வர பிரார்த்தனை செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி பசுபதி செட்டியார் தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்து சிறப்புற்று விளங்குகிறது. இவ்வாலயத்தில் நேற்று இரவு நடைபெற்ற மகாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு சிவ வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வந்திருந்த 1008 பெண்களுக்கு அவர்களது பூஜையுடன் ருத்ராட்சம் மற்றும் ப்ருத்வி லிங்கமும் கொடுக்கப்பட்டு அவர்களது கையால் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முதலில் விளக்கேற்றி கணபதி பூஜை தொடங்கி உலக அமைதிக்காகவும் பூகம்பம் ஏற்பட்ட எகிப்து, சிரியாவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வரவும் அமைதி நிலவும் உயிரிழந்த பொதுமக்கள் ஆன்மா சாந்தி அடையும் அதில் காயம் அடைந்தவர்கள் பூரண நல வேண்டிய யும் விவசாயம் செழிக்க வேண்டியும் அப்போது ப்ருத்வி லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் பெண்கள் மனமுருக பிரார்த்தனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை அதில் கலந்து கொண்ட பெண்கள் அவர்களது கையாலேயே ஆலயத்தின் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசர்ஜனம் செய்தனர். இதில் நாகை, நாகூர், தெத்தி, செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், பால்பண்ணைசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1008 பெண்கள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ப்ருத்வி சிவலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion