மேலும் அறிய
தஞ்சாவூரில் வேண்டியவற்றை நிறைவேற்றி கொடுக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
தஞ்சாவூர் அய்யங்கடை வீதியில் அமைந்துள்ள நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.
![தஞ்சாவூரில் வேண்டியவற்றை நிறைவேற்றி கொடுக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் Prasanna Venkatesa Perumal fulfills the needs in Thanjavur தஞ்சாவூரில் வேண்டியவற்றை நிறைவேற்றி கொடுக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/4afc4ba1f8477a4c0198d65688c376ff1665399468644102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
தஞ்சாவூர் அய்யங்கடை வீதியில் அமைந்துள்ள நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தொழில் முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை, குழந்தை பேறு, குடும்ப விருத்தி போன்றவற்றிற்கு வேண்டிக் கொண்டு வருபவர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் நாலுகால் மண்டபத்தில் அமைந்துள்ள இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலின் மூலவராக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பிரசன்ன வெங்கடேச பெருமாள் மூலவர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
கோயிலுக்கு முன்பாக நாலுகால் மண்டபம் உள்ளது. கோயில் படிகளில் ஏறி தளத்தில் செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடிமரம், பலி பீடம் ஆகியவை உள்ளன.
வலப்புறம் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடப்புறம் பெருமாள் பாதமும் காணப்படுகிறது. அங்கு விசுவசேனர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, கேசவபெருமாள் களச்சியலட்சுமி சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, மதனகோபாலன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மதனகோபாலன் சன்னதிக்கு முன்பாக கருடாழ்வார் உள்ளார். இக்கோயிலின் இடப்புறம் அமைந்துள்ள தேர்முட்டியின் கீழ்ப்பகுதியில் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொழில் அமோக வளர்ச்சி அடைய வேண்டும், குடும்ப விருத்தி வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். மேலும் குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வேண்டுதல்களும் வைத்து இக்கோயிலுக்கு வந்தால் வேண்டுபவை நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்கும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி போல் இக்கோயிலில் நடக்கும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். வைகுந்த ஏகாதசி விழாவை ஒட்டி பகல் பத்து உற்சவம் நடக்கும். இதைத் தொடர்ந்து இராப்பத்து வைபவத்தின் முதல் நாளில் அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் (உற்சவர்) பரமபத வாசலைக் கடந்து தனி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவர்.
இதுமட்டுமின்றி பக்தர்கள் வேண்டும் பல வேண்டுதல்களும் நிறைவேறுகின்றது என்பதும் நம்பிக்கை. குழந்தை பேறு, குடும்ப ஒற்றுமை, தொழில் விருத்தி, பகைகள் அகலுதல், சிறந்த வருமானம், உறவினர் மத்தியில் ஒற்றுமை என்று அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுகிறது என்பதால் இக்கோயிலுக்கு மக்கள் மத்தியில் தனியிடம்தான்.
பக்தர்கள் வேண்டுபவை நிறைவேறுகிறது. தொழில் முன்னேற்றம் வேண்டி வேண்டுதல் நிறைவேறியவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தேர்தல் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion