மேலும் அறிய
Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!
Pongal Wishes 2024 in Tamil: தமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை” முன்னிட்டு உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழுங்கள்.

பொங்கல் வாழ்த்துகள்
Pongal Wishes 2024 in Tamil: தமிழ்நாட்டில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன மாதிரியான வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்பது பற்றி காணலாம்.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். புத்தாடை உடுத்தி, பொங்கலிட்டு, சூரிய கடவுளை வணங்கி பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழாவை மக்கள் சிறப்பிப்பார்கள். இந்த நன்னாளில் நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறி மகிழும் திருநாளாகவும் இருக்கிறது பொங்கல் விழா. இன்றைய தினத்தில் பரிமாறப்படும் வாழ்த்து செய்திகள் பற்றி பார்க்கலாம்.
- எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! தமிழர் மரபு காக்கவும், பாரம்பரியம் போற்றவும் பொங்கல் வாழ்த்துகள்.
- அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்!
- பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்!
- குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, இனிய பொங்கல் வாழ்த்துகள்..!
- தடைகள் அகல, நிலைகள் உயர, தலைகள் நிமிர, கனவுகள் நனவாக தை பிறந்திடும் நாளில் வழியும் பிறந்திடுமே.. இனிய பொங்கல் வாழ்த்துகள்..
- பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்!
- புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பொங்க, வளமை தங்க அனைவரும் இனிய தை திருநாள் வாழ்த்துகள்..!
- வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!
வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்!
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!
- பொங்கி வழியும் பொங்கலைப் போல!
உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும்
பொங்கி வழிந்திட இனிய வாழ்த்துகள்
- அன்பும், ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் வாழ்த்துகள்..!
- சூரியனுக்கு வணக்கம் செலுத்துவோம்
சூழலோடு வாழ பழகுவோம்
பச்சரிசி பொங்கல் படைப்போம்
பாசமோடு மாடுகளை காப்போம்
நாடு செழிக்க பாடுபடுவோம்
நல்லதொரு சிந்தனையை வளர்ப்போம்
நாளெல்லாம் உழைத்திடுவோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion