மேலும் அறிய

Pongal 2024: பொங்கல் உற்சவம்..!காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கோலாகலம்..!

Kanchipuram Temple : நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளி தேர் வீதி உலா உற்சவம் நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில்
 
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி முருகன் திருக்கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு வெள்ளித்தேர் வீதி உலா உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.

Pongal 2024: பொங்கல் உற்சவம்..!காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் கோலாகலம்..!
 
தைப்பொங்கல் தேர் வீதி உலா 
 
தைப்பொங்கல் வெள்ளி தேர் வீதி உலா உற்சவத்தை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவித்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்தனர்.
 
நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா

சுவாமி தரிசனம் 
 
பின்னர் மேளதாளம், பேண்ட், வாத்தியங்கள், முழங்க காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக வெள்ளித்தேர் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகள் வழியாக வெள்ளித்தேரில் உலா வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
 
நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா
நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா
 
 தல வரலாறு
 
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.
 
நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா
நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா

 பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?

"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு

தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!

ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!

ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!

Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!

Embed widget