மேலும் அறிய

Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!

Panguni Uthiram 2026 Date and Time Tamil: பங்குனி உத்திரம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.

Panguni Uthiram 2026 Date and Time Tamil: தமிழ் மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். பங்குனி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. தமிழ் மாதங்களில் கடைசி மாதமான இந்த மாதம் ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படும் மாதம் ஆகும்.

பங்குனி மாதத்திலே மிகவும் முக்கியமான நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம் எப்போது?

பங்குனி மாதத்தில் பெளர்ணமி நாளில் வரும் உத்திரம் நட்சத்திரம் பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் உத்திர நட்சத்திரம் மார்ச் 31ம் தேதி வந்தாலும், பெளர்ணமி அடுத்த நாளான ஏப்ரல் 1ம் தேதியே  வருகிறது. இதனால், பங்குனி உத்திரம் ஏப்ரல் 1ம் தேதியே கொண்டாடப்படுகிறது.

மார்ச் 31ம் தேதி மாலை 3.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 1ம் தேதி மாலை 4.17 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பெளர்ணமி திதி ஏப்ரல் 1ம் தேதி காலை 7.38 மணிக்கு தொடங்குகிறது. பெளர்ணமி ஏப்ரல் 2ம் தேதி காலை 7.57 மணிக்கு நிறைவடைகிறது. 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நேற்று கொடியேற்றப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோயில்கள் அதற்காக தயாராகி வருகிறது. 

கொண்டாடப்படுவது ஏன்?

பங்குனி உத்திரம் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த பங்குனி உத்திரம் நன்னாளில்தான் சிவபெருமான் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை, ரங்கமன்னார் - ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இந்த நன்னாளில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெறும் நடக்கும் திருக்கல்யாணத்தை காண்பதற்கு கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். சாமி பல்லக்கில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும் வழக்கம்.

இதுமட்டுமின்றி இந்த பங்குனி உத்திரம் நன்னாளில்தான் திருமாலின் மார்பில் திருமகள் இடம்பிடித்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. இதற்காக திருமகள் கல்யாணசுந்தர விரதம் இருந்ததாகவும் புராணங்களில் உள்ளது. வள்ளி அவதரித்ததும், ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இதே நாளில்தான் ஆகும். இது மட்டுமின்றி பாற்கடலில் லட்சுமி தேவி தோன்றிய நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கோலாகல கொண்டாட்டம்:

பங்குனி உத்திரம் நன்னாள் முருகப்பெருமான் ஆலயங்களில் மிகவும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் பலரும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். 

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோயில்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள கோயில்களிலும் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐயப்பன் அவதரித்த நாளாக கருதப்படுவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் குவிவார்கள். இதனால், முக்கியமான கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget