மேலும் அறிய

பங்குனி உத்திரம்; பெரியகுளம் முருகன் கோயிலில் திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது . பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

முருகன் திருக்கோவில்:

தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

பங்குனி உத்திரம்; பெரியகுளம் முருகன் கோயிலில் திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

கோவிலின் விசேச நாட்கள்:

கோவிலில் சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகைவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற  நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

CSK New Captain: முடிவுக்கு வந்த தோனியின் சகாப்தம்; சென்னை அணியின் புதிய கேப்டனான இளம் சிங்கம்!

பங்குனி உத்திரம்; பெரியகுளம் முருகன் கோயிலில் திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

வரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக்  கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான் என்று வரலாறு  கூறுகிறது.

திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு:

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு 15 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் மண்டகப்படி பூஜை நடைபெறும்.

IPL 2024: சி.எஸ்.கே.,வுக்கு அடுத்த சிக்கல்! ஐ.பி.எல். இருந்து விலகும் ”குட்டி மலிங்கா” பதிரனா - என்ன காரணம்?

பங்குனி உத்திரம்; பெரியகுளம் முருகன் கோயிலில் திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு பூஜை:

இதில் ஆறாம் நாள் மண்டகப்படி சிதம்பர சூரிய நாராயணன் குடும்பத்தின் சார்பாக பூஜை நடைபெற்றது இதில் அரம்வளர்த்த நாயகி, முருகன் வள்ளி தெய்வானை, சோளீஸ்வரன் மற்றும் திருஞான சம்பந்தம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருவாசகம் பாடப்பட்டு திருஞானசம்பந்தம் சாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி  மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது சாலையில் இருபுறங்களில் இருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜைகள் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் சிதம்பரசூரியவேல் குடும்பத்தினர் சார்பாக பிரசாதங்கள் வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget