Marriage: திருமணத்தின்போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது என்னென்ன? ஜோதிடம் சொல்வது இதுதான்..!
ஒரு மனிதனின் வாழ்வில் புதிய தொடக்கத்தை தரும் திருமணத்தை முறைப்படி செய்ய வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள்.
ஆண், பெண் இருவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். வாழ்வின் புதிய தொடக்கமான திருமணத்தை சுபமுகூர்த்த தினத்திலே நடத்துகின்றனர். அப்பேற்பட்ட திருமணத்தின்போது நாம் கட்டாயம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.
செய்யக்கூடாதது என்ன?
ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வரும் மல மாதத்தில் திருமணத்தை நடத்தக்கூடாது. ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது ஆகும்.
திருமணத்தை தை, பங்குனி, வைகாசி, ஆவணி, ஆனி மாதங்களில் நடத்துவது சிறப்பு ஆகும். திருமணத்தை பெரும்பாலும் புதன். வியாழன். வெள்ளி போன்ற நாட்களில் நடத்தினால் கூடுதல் சிறப்பு ஆகும். மற்ற நாட்களில் நல்ல நேரம் பொருந்தி வந்தால் திருமணத்தை நடத்தலாம்.
பஞ்சாங்கப்படி, துதிவிதியை, திரிதியை, பஞ்சி, தசமி, சப்தமி, திரியோதசி ஆகிய நாட்களில் திருமணத்தை தவிர்த்துவிட வேண்டும். அக்னி நட்சத்திரம், கசரயோகம், மிருத்யூ பஞ்சக காலத்தில் மணமக்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடாது. அதேபோல, மணமக்களின் சந்திராஷ்டம தினத்தில் திருமணம் செய்யக்கூடாது.
மணமக்கள் பிறந்தநாள்:
மிக முக்கியமாக மணமக்களின் பிறந்த நாளிலோ அல்லது கிழமைகளிலோ திருமணம் செய்யக்கூடாது. கல்யாணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் திருமண லக்னத்திற்கம், மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்பெற்றிருக்கக்கூடாது. அதேபோல, ரிஷபம், மிதுனம், சிம்மம், கடகம், தனுசு, மீனம், கன்னி, துலாம் ஆகிய சுப லக்னங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நாளில் வரும் முகூர்த்த லக்னத்தின் ஏழாவது இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். வளர்பிதைற காலத்தில்தான் திருமணத்தை நடத்த வேண்டும். மேலே கூறியவற்றை கடைபிடிப்பது மிகவும் நல்லது ஆகும்.
மேலும், மணமக்களின் ஜாதகத்திற்கு ஏற்ப திருமண நாளை நிச்சயித்துக் கொள்வதும் நல்லது ஆகும்.
மேலும் படிக்க: Palani Murugan Temple: பழனி கோயில் பக்தர்கள் கவனத்திற்கு: இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இல்லை: காரணம் என்ன?
மேலும் படிக்க: Avani Sunday: 'சிவன், விஷ்ணு, பிரம்மா..' : ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இத்தனை ஸ்பெஷலா?!