Palani Temple Collection: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
Palani Temple Hundi Collection: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் மூலம் ஒரு நாள் எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 546 வருவாயாக கிடைத்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
TN Agri Budget 2023 LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 20, 21, 22-ந் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. பழனி மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடந்தது. முன்னதாக உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
Congo : காங்கோவில் பதற்றம்...அலறிய மக்கள்...பயங்கரவாத தாக்குதலால் 22 பேர் பலி!
அப்போது பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்த ஒரு கிலோ எடை கொண்ட வெள்ளி பிஸ்கட் கிடைத்தது. இதேபோல் தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 546 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 762 செலுத்தப்பட்டிருந்தது.
இதைத்தவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் 1,029 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 33 கிலோ 67 கிராம் (33,067) ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்