அதிகாலை 1 மணிவரை வீடியோ கேம்: சரியான பாடம் புகட்டிய தந்தை: கதறி அழுது மனம் மாறிய மகன் - நடந்தது என்ன?
குழந்தைகளிடம் இதைச் செய்யாதே என்று சொன்னால் அதைத்தான் செய்வார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவார்கள். அதனால் தானோ என்னவோ இந்தத் தந்தை அதிகாலை 1 மணிக்கு வீடியோ கேம் விளையாடிய மகனை.. அப்படிச் செய்யாதே என்று கூறாமல் வேறு ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார்.
குழந்தைகளிடம் இதைச் செய்யாதே என்று சொன்னால் அதைத்தான் செய்வார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவார்கள். அதனால் தானோ என்னவோ இந்தத் தந்தை அதிகாலை 1 மணிக்கு வீடியோ கேம் விளையாடிய மகனை.. அப்படிச் செய்யாதே என்று கூறாமல் வேறு ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார்.
சீனாவில் நடந்த சம்பவம்:
சீனாவின் சென்ஜென் நகரில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹுவாங் என்ற அந்த நபர் தன் மகன் அதிகாலை 1 மணிக்கு வீடியோ கேம் விளையாடுவதைக் கவனித்துள்ளார். அந்தச் சிறுவனுக்கு வயது 11 தான். அப்படியிருக்க அதிகாலை 1 மணி வரை வீடியோ கேம் விளையாடுகிறான் என்றால் அச்சிறுவன் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி இருக்கிறான் என்பதை அந்தத் தந்தை புரிந்து கொண்டார்.
மகனுக்கு தக்க பாடம் கற்பிக்க விரும்பினார். அதனால் அந்தச் சிறுவனிடம் சென்று நீ உனக்கு எவ்வளவு நேரம் விளையாடத் தோன்றுகிறதோ அவ்வளவு நேரம் விளையாடலாம் என்றார். அதிகாலை 6.30 மணிக்குப் பார்க்கும்போதும் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இன்னும் விளையாடலாம் தம்பி என்று தந்தை அனுமதி கொடுக்க ஒரே குதூகலத்தில் மதியம் 1.30 மணிவரை சிறுவன் விளையாடினான். அதன் பின்னர் கொஞ்சம் கண் அயர்ந்துபோக தூங்க ஆரம்பித்தான். அப்போதுதான் தந்தை தனது நிபந்தனையைச் சொன்னார். தம்பி நீ இவ்வளவு நேரம் விளையாட அனுமதித்தேன் அல்லவா அதன் பின்னர் ஒரு நிபந்தனை இருந்தது. அதாவது நீ தூங்காமல் விளையாட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. நீ அதனால் தூங்கியதுபோதும் எழுந்து வீடியோ கேம் விளையாடு என்று கூறியிருக்கிறார். அதிரிச்சியுற்ற சிறுவன் சரி கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று மீண்டும் விளையாடினான். இன்னும் 5 மணி நேரம் சென்றது. அவ்வளவு தான் சிறுவனுக்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உடனே சிறுவன் தந்தையிடம் கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்துவிட்டான். அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். என் தவறை உணர்ந்துவிட்டேன். இனி என் தூக்க நேரம் வந்தவுடன் தூங்கிவிடுவேன். தூங்கச் செல்லும் முன்னர் நிச்சயமாக வீடியோ கேம் விளையாட மாட்டேன் என்றெல்லாம் சத்தியம் செய்து கொடுத்துள்ளான். ஒருவழியாக தந்தையும் பாடம் புகட்டப்பட்டதை உணர்ந்து சிறுவனை தூங்க அனுமதித்தார். 17 மணி நேரம் வீடியோ கேம் தண்டனை மட்டுமல்ல சிறுவனை திருத்தும் உபகரணமாகவும் இருந்துள்ளது.
இதைப் பற்றி ஹுவாங் சீன சமூக வலைதளமான டோயினில் தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற பெற்றோர் யாரும் இதுபோன்ற தண்டனையை கையில் எடுக்க வேண்டாம் என்றும் கோரியுள்ளார். அவரது பதிவின் கீழ் பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்படுகின்றன. சிலர் சரியான பாடம் என்றும் சிலர் குழந்தையிடம் இத்தனை வன்முறை கூடாது என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் 11 வயது சிறுவனை 17 மணி நேரம் கண் விழிக்க வைத்தால் அது பெரும் ஆபத்து என்றும் கூறியுள்ளனர்.