மேலும் அறிய

பழனி முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழா

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கூடிய சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதி முன்பு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

Mirabai Chanu Wins Silver: பளுதூக்குதல் போட்டி...வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்தியாவின் மீராபாய் சானு

பழனி முருகன் கோயிலில் வெகு விமரிசையாக  நடந்த கார்த்திகை தீபத்திருவிழா

அவர்கள் மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலை அடிவாரம் பாத விநாயகர் கோயிலிலும், மலைக்கோயிலிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 4.30 மணிக்கு விளாபூஜையும், 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

பழனி முருகன் கோயிலில் வெகு விமரிசையாக  நடந்த கார்த்திகை தீபத்திருவிழா

இதையடுத்து மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோயில் முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு மலைக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். சொக்கப்பனை எரிந்த பின்பு அதில் கிடைத்த 'அஞ்சன மை' மூலவர் சன்னதியில் வைத்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சின்னக்குமாரருக்கு 'அஞ்சன மை' வைத்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

Delhi MCD Results 2022: டெல்லி மாநகராட்சி தேர்தல்: தொடங்கிய வாக்கு எண்ணிக்கை; ஆம் ஆத்மி முன்னிலை..!
பழனி முருகன் கோயிலில் வெகு விமரிசையாக  நடந்த கார்த்திகை தீபத்திருவிழா

இதையடுத்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை மாற்றப்பட்டது. அதன்படி அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Embed widget